states

ரூ.9,000 கோடி விவகாரம் : மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் ராஜினாமா

சென்னை, செப். 29 - ரூ.9,000 கோடி விவ காரத்தில் தமிழ்நாடு மெர்க் கண்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் ராஜினாமா செய்துள்ளார். சென்னை கோடம் பாக்கத்தைச் சேர்ந்த கார்  ஓட்டுநர் ராஜ்குமார் (28),  பழநியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள் ளார். கடந்த செப்டம்பர் 9  அன்று அவரது கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி தவறு தலாக வரவு வைக்கப் பட்டது. பின்னர் அந்த தொகை அவரது கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப் பட்டது. இதுதொடர்பாக ஓட்டுநர் ராஜ்குமார் சென்னை காவல் ஆணை யரகத்தில் புகார் அளித்தார். ஆனால், இதுவரை அந்தப் பணம் தொடர்பாக வங்கி சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிர்வாக இயக்கு நரும், தலைமை செயல் அதி காரியுமான எஸ்.கிருஷ்ணன் திடீரென தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தனிப்பட்ட காரணங் களுக்காக பதவி விலகுவ தாக தனது கடிதத்தில் தெரி வித்துள்ளதாகவும், அதை வங்கி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.