states

தீக்கதிர் விரைவு செய்திகள்

திரிபுரா புதிய முதல்வராக  மாணிக் சாஹா பதவியேற்பு

அகர்தலா, மே 15- திரிபுரா முதல்வரான பிப்லப் குமார் தேப்  சனிக்கிழமையன்று திடீரென தனது பத வியை ராஜினாமா செய்தார். உள்கட்சி பூசல்  காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சாஹா தேர்வு செய் யப்பட்டுள்ளார். இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டமன்ற குழு தலைவராக மாணிக் சாஹாவை தேர்வு செய்தனர்.  இந்நிலையில், திரிபுராவின் புதிய முதல்வராக மாணிக் சாஹா அகர்தலாவில் உள்ள ராஜ்பவனில் ஞாயிறன்று பதவி யேற்றார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர்.

தில்லி தீ விபத்து வணிக வளாக கட்டிட உரிமையாளர் கைது

புதுதில்லி, மே 15- தில்லி மேற்கு பகுதியில் உள்ள முன்ட்கா  மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டி டத்தில் வெள்ளியன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி பலியானார்  கள். 12 பேர் காயமடைந்தனர். 70க்கும் மேற்பட்  டோர் மீட்கப்பட்டனர். சிலர் மாடியில் இருந்து குதித்து தப்பினர்.  விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வை யிட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். மேலும் காய மடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவா ரணம் அறிவித்தார்.  இந்நிலையில் தற்போது தீ விபத்து ஏற்பட்ட வணிக வளாக கட்டிடத்தின் உரிமையாளர் மணிஷ் லக்ராவை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். வணிக வளாக கட்டிடத்தை  பாதுகாப்பு இல்லாத வகையில் கட்டியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மே 26-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை 

சென்னை, மே 15- சென்னை நேரு உள் விளையாட்டு அரங்  கத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மே 26-ஆம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது சுமார் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு கிறார் பிரதமர் மோடி.  சென்னை வரும் பிரதமர் மோடியை முதல மைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசு கிறார். அப்போது இலங்கை தமிழர் விவகா ரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைக்க உள்ளார் என தகவல் வெளி யாகியுள்ளது.

புத்த ஜெயந்தி விழாவில் பங்கேற்க  பிரதமர் இன்று நேபாளம் பயணம்!

புதுதில்லி, மே 15- புத்த பூர்ணிமா விழாவையொட்டி பிரதமர் நரேந்  திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு நேபாள  பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அழைப்பு விடுத்திருந்தார்.  இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மே 16-ஆம் தேதி நேபாளத்துக்கு பயணம் மேற்  கொள்கிறார். அங்கு புத்த ஜெயந்தி தினவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஷேர் பகதூர் தேவுபாவையும் சந்தித்து பேச வுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்ப தாவது:- நேபாளத்துடனான நமது நட்புறவு இணை யற்றது. இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடை யிலான நாகரீகம் மற்றும் மக்கள் தொடர்புகள் ஆகியவை நெருங்கிய நட்புறவின் நீடித்த அம்ச மாக அமைகிறது.  இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் நேபாளத்திற்கு பயணம் மேற்  கொள்கிறேன். மேலும் பல துறைகளில் ஒத்து ழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.

  1. மகாராஷ்டிராவில் நிலவும் கடும் குடிநீர்  தட்டுப்பாட்டால் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் வடிகால்களில் குழி தோண்டி குடிநீர் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
  2. சென்னை பெரம்பூா் ரயில் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் 2022-23-ஆண்டில் 4 ஆயிரத்து 275 பெட்டிகள் தயாரிக்க ரயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  3. ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், இங்கு வரும் வாக னங்களை கவனமாக இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  4. நாட்டில் படகுச் சுற்றுலாவை மேம்படுத்து வதற்கான வழிகளை ஆராய்வதற்கு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ள தாக ஒன்றிய அமைச்சா் சர்வானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
  5. கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்சம் 450 மணி நேர இன்டர்ன்ஷிப்பைக் கட்டாயமாக்க யுஜிசி முடிவெடுத்துள்ளது.
  6. தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவார் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்த மராத்தி நடிகை கேத்தகி சித்தலே கைது செய்யப்பட்டுள்ளார்.
  7. அசாமில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் திமா ஹிசாவ் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 80 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.  
  8. ஜமைக்கா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரெனெடின்ஸ் உள்ளிட்ட கரீபியன் நாடுகளுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
     

​​​​​​​