states

நீதித்துறை உள்கட்டமைப்பு வசதிகளை தமிழகம் முனைப்புடன் மேம்படுத்துகிறது

மதுரை, மார்ச் 25- நீதித்துறை  உள்கட்டமைப்பு வசதி களை தமிழகம் முனைப்புடன் மேம்படுத்தி வருகிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டினார். மதுரையில் மார்ச் 25 அன்று நடை பெற்ற நீதிமன்ற கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் பேசியதாவது:  வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு, அற்புதமான விருந்தோம்பலுக்கு நன்றி. தமிழகம் நீதித்துறை கட்டிடங்களின் உள் கட்டமைப்பு வசதிகளை முனைப்புடன் மேம்படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பணியாற்றும் நிலை உள்ளது. பெண்களுக்கான நாப்கின் இயந்திர வசதிகள் இல்லை.

தமிழக முதல்வர் தரப்பில் 3 கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த நாட்டிற்குமானது. இணைய வழி மூலமாக நீதிபதி தில்லியில் இருக்க  வழக்கறிஞர்கள் மேலூரிலோ, விருதுநக ரிலோ இருந்து வாதிடலாம். நீதிமன்ற செயல்பாடுகளை நேரலை செய்வதன் மூல மாக சட்டக் கல்லூரி மாணவர்களும் கற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும். கொரோனா காலத்தில் வீடியோ கான்ப ரன்ஸ் மூலமாக உயர்நீதிமன்றங்களில் மட்டும் 78 லட்சம் வழக்குகள் விசாரிக் கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்து கையில் சாமானியரின் பிரச்சனைகள், வழக்கறிஞர்களின் பிரச்சனைகள் அடை யாளம் காணப்பட்டன. ஆங்கிலம் நமது முதல் மொழி அல்ல.  நமது தாய்மொழியிலேயே நாம் பயிற்று விக்கப்பட்டோம். சில வழக்கறிஞர்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஆனால் இளம் வழக்கறிஞர்கள் மொழியை ஒரு தடை யாக பார்க்கக் கூடாது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உச்ச நீதிமன்ற உத்தரவு களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகள் ஆங்கி லத்தில் இருக்கும்போது மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அதனை தங்கள் மொழியில் அறிந்துகொள்ள, நாற்பது முதல் ஐம்பதாயிரம் வரை சந்தா செலுத்தி தனியார் சட்டத்துறை இணையதளங்கள் மூலமாக அறிந்து கொள்ளும் சூழல் இருந்தது.  தற்போது அது மாற்றப்பட்டுள்ளது .அந்த உத்தரவுகள் சரியாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமை யில் குழு உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு களும் அந்தந்த பிராந்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். 1 கோடியே 11லட்சத்து 685 உயர் நீதிமன்ற உத்தரவு கள் உள்ளன. அதில்  8 லட்சத்து 76 ஆயிரம் உத்தரவு கள் சென்னை உயர்நீதிமன்றத்தினுடை யது. இந்த உத்தரவுகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வழக்கறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்படுகையில் அவை குறித்து பொதுமக்களும் அறிந்து கொள்ளும் நிலை உருவாகும்.  அதனை வழக்கறிஞர்கள், தாசில் தார்கள், வருவாய் துறையினர், காவல்  துறையினர், கல்வித்துறையில் உள்ள வர்கள் அறிந்து கொள்ளவும், புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நடந்து கொள்ளவும் உதவியாக அமையும். இது நடைமுறைக்கு வந்தால் எவ்வாறு இருக்கும்? 

எனது தலைமையில் ஆறு பேர் கொண்ட உறுப்பினர்கள் கொலீஜியத்தில் உள்ளோம். நீதிபதிகள் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதித்து வருகிறோம் தமிழகத்தில் இளம் வழக்கறிஞர் களுக்கு உதவித் தொகை ஐந்தாயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படு கிறது. சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது போது மானது அல்ல. இதனால் இளம் வழக்கறி ஞர்கள் தாங்கள் பயின்றதற்கு தொடர்பு இல்லாத வேறு துறைகளில் பணியாற்றும் நிலை உள்ளது. இளம் வழக்கறிஞர்களின் தொடக்க காலம் கற்பதற்கான காலம். மூத்த வழக்கறி ஞர்கள் இந்த நடைமுறையை மாற்ற முயல வேண்டும். இன்றைய இளம் வழக்கறிஞர்கள் திறமையானவர்கள், எளிதில் கற்றுக் கொள்ளக் கூடியவர்கள். அவர்களிடம் மூத்த வழக்கறிஞர்கள் உரையாடுங்கள். மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறி ஞர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சட்டத்துறையில் பெண்களுக்கு போது மான பங்களிப்பு வழங்கப்படவில்லை என புள்ளி விவரம் கூறுகிறது. பெண்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பல்வேறு பொறுப்பு களோடு பணியாற்றவரும் இளம் பெண்  வழக்கறிஞர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குடும்ப பொறுப்பு காரணமாக பெண்கள் கூடுதல் நேரம்  பணியாற்ற இயலாது என எண்ணப்படு கிறது.

குழந்தையை பராமரிப்பது, குடும்பத்தை பராமரிப்பது ஆண் ,பெண் இருவருக்கும் சமமானது. ஆனால் அது பெண்களுக்கான கடமை என சமூகம் அவர்கள் மீது சுமத்துகிறது.  இதனால் பெண் வழக்கறிஞர்களை பணியமர்த்துவதில் தயக்கம் உள்ளது.  பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுகின்றன. நில ஆக்கிரமிப்பு தொடர்பான மேல்முறை யீட்டு வழக்கில் நான் வாதிட வேண்டும். ஆனால் எவ்வாறு வாதிட வேண்டும் என  எனக்கு தெரியாது. எனது மூத்த வழக்கறி ஞர்கள் தான் எனக்கு வழிகாட்டினார்கள். நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளில் முரண்பாடு ஏற்படுவதாக கூறி பணியை வழக்கறிஞர்கள் புறக்கணிக்கக்கூடாது. அது தொடர்பாக  எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் அதனை நிவர்த்தி செய்ய நிச்சயம் முயற்சிப்பேன். நீதித்துறையின் உத்தரவுகள் மாற்றுத் திறனாளி வழக்கறிஞர்களும் அறிந்து கொள்ளும் விதமாக அமைய வேண்டும்.

மதுரை மிகவும் தனித்தன்மை வாய்ந்த  கோவில் நகரம். சிறப்புமிக்க பாரம்பரியம் கொண்ட, சமூக புரிந்துணர்வு கொண்ட, பாரம்பரியத்தைக் கொண்டது மதுரை. சமூக வேறுபாடுகளை கடந்து, பரந்த மனப்பான்மையுடன், எண்ணங்களை வெளிப்படுத்தி, கற்றலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பாலினம், சமூகம், சமயம் போன்ற வேறுபாடுகளை கடந்து கணியன் பூங் குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” வரிகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். “பெரியோரை வியத்தலும் இலமே... சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே” எனும் வரிகளின் பொருள் இப்போது எனக்கு புரிகிறது. மகாராஷ்டிராவிற்கும் தமிழகத்திற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.வாழ்க்கையை எதிர்கொள்வதில் பல ஒற்றுமைகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

;