எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் சென்னை, மார்ச் 21- தமிழ்நாடு - புதுச்சேரியில், அதிமுக சார்பில் ஏற்கெனவே 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழனன்று 2-ஆம் கட்டமாக 17 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப் பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதன்படி, ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் பிரேம் குமார், வேலூர் - டாக்டர் பசுபதி, திரு வண்ணாமலை கலியபெருமாள், நீலகிரி - தமிழ்ச்செல்வன், கோயம்புத்தூர் - சிங்கை ராமச்சந்திரன், தருமபுரி - டாக்டர் அசோகன், கள்ளக்குறிச்சி - குமரகுரு, திருப்பூர் - அரு ணாச்சலம், திருச்சி -கருப்பையா, பெரம்ப லூர் - சந்திரமோகன், கன்னியாகுமரி - நசரத் பசிலியான், மயிலாடுதுறை - பாபு, பொள் ளாச்சி - கார்த்திகேயன், சிவகங்கை - சேவி யர் தாஸ், திருநெல்வேலி - சிம்லா முத்துச் சோழன், தூத்துக்குடி - சிவசாமி, புதுச்சேரி - தமிழ்வேந்தன் ஆகியோர் அதிமுக வேட்பா ளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் அதிமுக 33 தொகு திகளிலும், தேமுதிக 5 தொகுதிகளிலும், எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சி தலா 1 தொகு திகளிலும் போட்டியிடுகின்றன.