states

கிருஷ்ணகிரி கொலையில் அதிமுக கிளைச் செயலாளர் கைது

சென்னை, மார்ச் 23- கிருஷ்ணகிரி அருகே மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்து மருமகனை கொலை செய்த மாமனார் சங்கர் அதிமுக கிளைச் செயலாளர் என்று முதல்வர் சட்டப் பேரவையில் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம் பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (28). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவரும் அவதானப்பட்டி அருகே உள்ள புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மகள் சரண்யா (21)  என்பவரும் காதலித்து வந்தனர். இந்த  காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோ ருக்கு தெரிய வந்தது. இருவரும் ஒரே  சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற் றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரி வித்தனர். இதனையடுத்து, ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதில் சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர்.  இந்த நிலையில், செவ்வாய்க் கிழமை (மார்ச் 21) மதியம் 2 மணிக்கு  கிட்டம்பட்டியிலிருந்து வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் ஜெகன்  சென்று கெண்டிருந்தார். தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் அணை பிரிவு மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலை  பக்கமாக அவர் சென்று கொண்டி ருந்தார்.  அப்போது அவரை வழிமறித்த மாமனார் சங்கர் மற்றும் உறவினர் கள் 2 பேர் ஜெகனை கீழே தள்ளி  விட்டனர்.

பின்னர் தாங்கள்  வைத் திருந்த அரிவாளால் சரமாரியாக ஜெகனை வெட்டினர். இதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில், தனது மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் மருமகனை பட்டப்பகலில் வெட்டிக் கொன்ற பெண்ணின் தந்தை சங்கர், கிருஷ்ணகிரியிலுள்ள கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்நிலையில், இந்த சம்பவம்  தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை யில் வியாழக்கிழமை (மார்ச் 23) நேர மில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,  “பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக் கிறது” என்றார். இதற்கு பதிலளித்து பேசிய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், “ இந்த கொலையில் தொடர்புடைய சங்கரை  கைது செய்த காவல் துறையினர் சேலம்  மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர் அவதானப்பட்டி அதிமுக கிளைச்  செயலாளர் என்பது காவல் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது”என்றார். இது போன்ற கொடூர நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்காள்ளப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனை வரும் ஒருங்கிணைந்து மனித நேய  அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தை பேணி காக்க வேண்டும் என்றும் முதல மைச்சர் கேட்டுக்கொண்டார்.

;