சென்னை, மே 11- தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் 2023-24ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலைப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மாணவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் வரவேற்றுள்ளது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ கத்துடன் இணைந்து (மாநில அரசின் வழி காட்டுதலின்படி) இந்த ஒருங்கிணைந்த சேர்க்கைக்கு செல்லும் என்கிறார் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல் கலைக்கழக துணைவேந்தர் ஜி.சுகுமார். இளங்கலைப் படிப்புகளுக்கான ஆன் லைன் விண்ணப்பங்கள் மே 10அன்று துவங்கியுள்ளது. ஜூன் 9 வரை ஒருங்கி ணைந்த சேர்க்கை இணையதளமான http://tnagfi.ucanapply.com இல் பதி விறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04365-256430, 9442601908 என்ற எண்களைத் தொடர்புகொள்ளலாம். அல்லது ugadmission@tnjfu.ac.in. மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம். பன்னிரண்டாம் வகுப்பில் கலை அறிவியல் படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. B.F.Sc. (Bachelor of Fisheries Science) : 120 இடங்கள்
2. B.Tech. (Fisheries Engineering) : 30 இடங்கள்
3. B.Tech. (Energy & Environmental Engineering)* : 20 இடங்கள்
4. B.Tech. (Biotechnology)* : 40 இடங்கள்
5. B.B.A. (Fisheries Enterprises Management)* : 20 இடங்கள்
6. B.Tech. (Food Technology)* : 40 இடங்கள்
7. B.Voc. (Industrial Fish Processing Technology)@ : 25 இடங்கள்
8. B.Voc. (Industrial Aquaculture)@ : 30 இடங்கள்
9. B.Voc. (Industrial Fishing Technology)@ : 20 இடங்கள்
இதில் * குறியிடப்பட்டவை சுயநிதிபடிப்புகள்;
@ குறியிடப்பட்டவை UGC ஸ்பான்சர் செய்யப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள் ஆகும்.