states

செயலித் தொழிலாளரையும் துரத்தும் சாதி

செயலி வழி பணி புரியும் “கிக்” தொழி லாளர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வு இது. களச் செயல்பாடுகள் மற்றும் இயக்கங் களின் மக்கள் குழு, செயலி வழி போக்கு வரத்து ஊழியர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து பென்சில்வேனியா பல்கலைக் கழகம், ஜெர்மனியை சேர்ந்த பிரெட்ரிச் - எல்பர்ட் - ஸ்டிப்டங் இந்தியா ஆகிய  அமைப்புகளின் தொழில் நுட்ப உதவி யோடு 10000  இந்திய செயலி வழிக் கார் ஓட்டுநர்கள் (5302 பேர்), கிக் (5028 பேர்),  சாலையோரத் தொழிலாளர்களிடம் எட்டு பெரு நகரங்களில் - தில்லி, ஹைதரா பாத், பெங்களூரு, மும்பை, லக்னோ, கொல்கத்தா, ஜெய்ப்பூர், இந்தூர் - நடத்தப்பட்ட ஆய்வு இது. 

இதோ ஆய்வின் முடிவுகள்...

  •     33 சதவீத செயலி வழி கார் ஓட்டுபவர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள்.
  •  83 சதவீத செயலி கார் ஓட்டுனர்கள் நாளுக்கு 10 மணி நேரத்திற்கு மேல் உழைக்கிறார்கள்.
  •     60 சதவீத செயலி வழி கார் ஓட்டுநர்கள்நாளுக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள். 
  •     43 சதவீதம் பேர் ஒரு மாதத்திற்கு 15000ரூபாய்க்கும் கீழே சம்பாதிக்கிறார்கள்.
  •  34 சதவீத செயலி வழி டெலிவரி தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ.10000க்கும் கீழே தான் சம்பாதிக்கிறார்கள்.
  •  நீங்கள் வாரத்திற்கு ஒரு நாளாவது ஓய்வு எடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு 40 சதவீதம் பேரின் பதில் “இல்லை”. 34 சதவீதம் பேரே “ஆம்” என்று பதில். 14 சதவீதம் பேர் பதில் சொல்லவில்லை. 12 சதவீதம் பேர் சில 
  • நேரங்களில் ஓய்வு எடுக்கிறோம் என்றுபதில். 
  •  இந்த ஆய்வில் மிக முக்கியமான அவலம்ஒன்றும் வெளிப்பட்டுள்ளது. அதீத நேரம் பணியாற்ற வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பட்டியல் சாதி, பழங்குடியினர் ஆவார்கள். 
  •     பட்டியல் சாதி செயலித் தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் 14 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்கிறார்கள். இது பிற சாதி தொழிலாளர்களில் 16 சதவீதமாக உள்ளது. 

அதீத நேரம் பணி புரிய வேண்டி இருப்பதால் அவர்கள் கடுமையான உடல்  உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்; சாலை விபத்துக்களுக்கான வாய்ப்புகள் அதி கரித்துள்ளன; வாசலில் 10 நிமிடத்தில் டெலிவரி என்ற இ காமர்ஸ் நிறுவனத்தின் கொள்கை உயிருக்கே ஆபத்தை கொண்டு வருகின்றன; பணிப் பாதுகாப்பு இல்லாதது கூடுதல் அழுத்தம், உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது; 76 சதவீத டெலிவரி தொழிலாளர்கள் சம்பளம் போதாமல் திண்டாடுகிறார்கள் என்று ஆய்வு அவர்களின் வாழ்நிலை குறித்து பட்டியல் இட்டுள்ளது. 

(தி இந்து - 11.03.2024) - க.சுவாமிநாதன்