states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆக. 6-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல்!

நாட்டின் 16-ஆவது குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது குடியரசுத் துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி, இந்த தேர்தலை இந்திய தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. இதன்படி குடியரசுத் துணைத்தலைவருக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 5-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19 கடைசி நாளாகும். ஜூலை 20-ஆம் தேதி வேட்பு மனுவுக்கான பரிசீலனை நடைபெறும். முன்னதாக குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது!

சிங்கப்பூரின் மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி - 53 ராக்கெட் வியாழனன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஆராய்ச்சி மையத்தின்,  இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி ராக்கெட்  விண்ணில் பாய்கிறது, அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் புதனன்று மாலை 5 மணிக்கு  தொடங்கியது. டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட், ஸ்கூப் 1 ஆகிய 3 செயற்கைக்கோள் களுடன்  பிஎஸ்எல்வி சி - 53 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது,    முழுக்க முழுக்க வர்த்தக அடிப்படையில் இந்த ராக்கெட்டை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது.

ஜூலை 4 இல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு?

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய வர்களுக்கான தேர்வு முடிவுகள் முறையே ஜூலை 4 மற்றும் ஜூலை 10 தேதிகளில் வெளி யாகும் என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. மாண வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பதிவு எண், வரிசை எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் இணையதளத்தில் அதாவது digilocker.gov.in மூலமும் தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

அசாமில் கனமழை, வெள்ளம்: பலி 139 ஆக உயர்வு! 

 அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 139  ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில் தீவிர மழைப்பொழின் காரணமாக ஆறுகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு ஆயிரக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கி யுள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 19 மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 1.76 லட்சம் மக்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 139 ஆக உயர்ந்துள்ளது. 

பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் பலி!

பீகார் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை  பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 16 பேர் பலியாகினர். இங்குள்ள 38 மாவட்டங்களில்  கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் 4 பேர், போஜ்பூர் மற்றும் சரண் ஆகிய மாவட்டங்களில் 6 பேர்,  மேற்கு சம்பாரண் மற்றும் அராரியா ஆகிய மாவட்டங்களில் நான்கு பேர், பங்கா மற்றும் முசாபர்பூர்  ஆகிய மாவட்டங்களில் இருவர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரி வித்துள்ள முதல்வர் நிதீஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அதிருப்தி எம்எல்ஏ-க்கள் எப்படி வாக்களிக்க முடியும்?

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த, ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ள நிலையில், நம்பிக்கை வாகெடுப்பில் யார் வாக்களிக்க முடியும், முடியாது? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என சிவசேனா தெரிவித்துள்ளது. தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பி விட்டால் குறிப்பிட்ட நபரை சட்டமன்ற உறுப்பினராக கருத முடியாது. மேலும் தகுதிநீக்க நோட்டீஸ் நிலுவையில் இருக்கும் போது அதிருப்தி எம்எல்ஏ-க்கள் எப்படி வாக்களிக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறது என்று அது கூறியுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வெறும் ஒரே ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் வழங்கியிருப்பதையும் சிவசேனா சாடியுள்ளது.

மம்தா குற்றச்சாட்டு

நான்காண்டு காண்ட்ராக்  டிற்குப் பிறகு ‘அக்னிவீரர்’ களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று மாநில அரசை ஒன்றிய அரசு வலியுறுத்தும் ஒரு கடிதம் எனக்கு வந்துள்ள தாகவும், உண்மையில், பாஜக வினருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம்” என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி யுள்ளார். 






 

;