2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வியாழனன்று அறிவிக்கப்பட்டன. எஸ் .எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய தெலுங்கு திரைப்படமான ஆர்ஆர்ஆர் திரைப்படம் 6 விருதுகளை வென்று அசத்தியுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு படம், சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த ஆண் பின்னணி பாடகர் (கால பைரவா), சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் (வி ஸ்ரீனிவாஸ்), சிறந்த நடன அமைப்பு (ப்ரேம் ரக்ஷித்), சிறந்த சண்டை காட்சி இயக்குநர் (கிங் சாலமன்) ஆகிய 6 விருதுகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.