states

நாட்டில் 2 லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்கள் கணினிமயம்

புதுதில்லி, டிச. 6 - நாட்டில் உள்ள கிராமப்பஞ்சாயத்துக் களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 063 கிராமங்கள் கணினிமயமாக்கப் பட்டிருக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்கள வையில் கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், நாட்டில் “டிஜிட்டல் இந்தியா”  என்ற சவாலை எதிர்கொள்ள கிராமப் பஞ்சாயத்துக்கள் கணினிமயமாக்கப் பட்டிருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும்கேட்டிருந்தார். இதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் இணை யமைச்சர்  ஸ்ரீகபில் மொரேஷ்வர் பாட்டில், நாட்டில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 073 கிராமப் பஞ்சாயத்துக் களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 063 கிராமப் பஞ்சாயத்துக்கள் கணினமய மாக்கப்பட்டிருப்பதாகவும், 43 ஆயிரத்து 10 கணினிமயமாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.     (ந.நி.)