கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.அக்டோபர் 5-ஆம் தேதி வரை மழை பெய்யும் என ஐம்டி கணித்துள்ளது.
கேரளாவில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. மழைக்கு சுவர்கள் இடிந்து விழுந்த சம்பங்களும் பதிவாகியுள்ளன. இருப்பினும் மாநிலத்தில் எங்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைவிடாது பெய்து வரும் மழையினால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.