states

img

ஸ்டார்ட்அப் மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் : பினராயி விஜயன்

ஸ்டார்ட்அப் மூலம் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என  கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள அரசு கல்வி, சுகாதாரத்துறைகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் சூழ்நிலையில்,  தொடர்ந்து கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் புதிய அரசு பள்ளிகளை கட்டுவதும், சுகாதாரத்துறையை மேம்படுத்தியும் வருகிறது.

அந்த வகையில் தற்போது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சில திட்டங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

கடந்த ஆறு ஆண்டுகளில் கேரளா ஒரு செழிப்பான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது. 3,000 ஸ்டார்ட்அப்கள் நிறுவப்பட்டு 35,000 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2026-க்குள் 15,000 ஸ்டார்ட்அப்களை உருவாக்கி 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம்.என அதில் கூறியுள்ளார்.