கேரள முதல்வர் கேள்வி
திருவனந்தபுரம், நவ.12- மக்கள் நலன் காக்க கேரள அரசு எடுக்கும் முயற்சிகளை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் திட்டம் பலிக்காது என்றும் ஒன்றிய அரசின் வெளி நாட்டுக் கடன் ரூ.49 லட்சம் கோடியாக இருக்கை யில் மாநில அரசு கடன் வாங்கக் கூடாதா என கேரள முதல்வர் கேள்வி எழுப்பினார். கேரள கருவூலத் துறையின் தலைமை அலு வலக கட்டிடத்தை வெள்ளியன்று (நவ.11) முதல்வர் திறந்து வைத்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது: எல்டிஎப் அரசாங்கத்தை மிரட்டலாம் என்று நினைத்தால் அதற்கு அடிபணியாது. நலப்பணிக ளுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் தேவை என்பது கேரளா வந்த ஒன்றிய நிதியமைச்சரின் ஆலோசனை. நலத்திட்ட விசயங்களில் ஒன்றிய அரசின் கொள்கை அல்ல கேரளாவுக்கு. ஏகபோ கங்களின் நலனை மட்டுமே மையம் உறுதி செய்கிறது. ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் தொழிலாளி வர்க்கம் உள்ளிட்ட பெரும்பான்மை யினரின் நலனை கேரளா உறுதி செய்கிறது. மேலும் அது தொடரும் என்றார்.
அழுத்தம் கொடுப்பதே அரசின் பணியா?
கேரளா கடன் வாங்கக் கூடாது என்று சொல்லும் ஒன்றிய அரசின் வெளிநாட்டுக் கடன் ரூ.49 லட்சம் கோடி. இந்த ஆண்டு மட்டும் ரூ.3.60 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள் ளது. கேரளா போதிய அளவு கடனை வாங்கி வீண் விரயத்தை தவிர்த்து நாட்டின் பொதுப்பணி களுக்கு பயன்படுத்தியுள்ளது. அது நாட்டின் பொதுவான நிலையை மேம்படுத்தும் என்பதை மக்கள் புரிந்துகொண்டு அதை பிரதிபலிக்கின்ற னர். மாநில அரசுக்கு அதிக அழுத்தம் கொடுப் பதே ஒன்றிய அரசின் பணி என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. மாநிலங்களோடு மாறுபட்ட அணுகு முறையை ஒன்றிய அரசு கடைப்பிடிக்கிறது. இது நிதிநிலையில் பல பிரச்சனைகளை உரு வாக்குகிறது. மாநிலங்களின் செயல்பாடுக ளின் மூலம் வசூலிக்கப்படும் மத்திய உள் வருவாய், விரும்பியவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பது ஒன்றிய அரசின் நிலைப் பாடு. விருப்பமுள்ள மாநிலங்களுக்கு அள்ளி அள்ளி வழங்கப்படுகிறது. அவற்றுக்கு ஆதர வும் உதவியும் உறுதி செய்யப்படுகிறது. கண்க ளுக்கு உறுத்தலாகத் தெரியும் மாநிலங்க ளுக்கு நியாயமான உதவியையும் வழங்க மறுக்கிறது.
எய்ம்ஸ்
இந்த நிலைப்பாட்டால் கேரளாவுக்கு மோச மான விளைவுகள்தான் கிடைக்கிறது. நிதித் துறை மட்டுமல்லாது, ஒன்றிய அனுமதியுடன் அமல்படுத்தும் திட்டங்களிலும் இது தெளி வாகிறது. இதற்கு எய்ம்ஸ் நல்ல உதாரணம். கேரளாவின் சுகாதாரத் துறைக்கு நாடு முழுவதும் பாராட்டு கிடைத்து வருகிறது. கேர ளத்தின் சுகாதார அமைப்புகள் உலகளாவிய கவனத்தை ஈர்க்கின்றன. இருப்பினும், நீண்ட கால தேவையான எய்ம்ஸ்க்கான அனுமதி துவக்க நிலையில் மட்டுமே உள்ளது. சில மாநிலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட எய்ம்ஸ் உள்ளன. எய்ம்ஸ் அளிக்கப்பட்ட மாநிலங்களு டன் ஒப்பிடுகையில், கேரளா எதனால் தகுதி யற்றது என்பதை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். கேரளாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் முதல்வர் கூறினார்.