குமுளி, ஜன.21- மாமேதை லெனின் மறைந்த நூற்றாண்டு தினத்தின் ஒரு பகுதியாக ஓவியக் கலைஞரும் தேசாபிமானி நாளிதழின் பீர்மேடு தாலுகா செய்தி யாளர் கே.ஏ.அப்துல் ரஸாக் தோழர் லெனினது மாபெரும் ஓவியத்தை வரைந்து அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார்.
குமுளி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 2800 சதுர அடி அளவி லான பிரம்மாண்டமான ஓவியத்தை அவர் வரைந்தார். ஞாயிறன்று காலை 6.30 மணிக்கு ஓவியம் வரையத் துவங்கி மாலை 6.30 மணிக்கு நிறைவு செய்தார். பிளாஸ்டிக் ஷீட் உள்பட பல்வேறு உபகரணங்களைப் பயன் படுத்தி, மாமேதை லெனின் தனது முஷ்டியை உயர்த்திப் பிடிப்பது போன்ற ஓவியத்தை அவர்வரைந்தார். ஓவியர் கே.ஏ.அப்துல் ரஸாக் லெனி னது 50க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.
ஏற்கனவே லெனின் ஓவியக் கண்காட்சியைக் கேரளத்தின் பல பகுதிகளில் அவர் நடத்தியுள்ளார். இது வரை 12000க்கும் மேற்பட்ட ஓவி யங்களை வரைந்துள்ள அப்துல் ரஸாக் ஓவியக் கலையில் பல்வேறு சாதனை களுக்குச் சொந்தக்காரராவார்.