states

img

விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு.... ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக சிஐடியு பேரணி....

கொச்சி:
விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் வகையில் ரிலையன்ஸ் மால்கள், பெட்ரோல் பம்புகளுக்கு தொழிலாளர்கள் அணிவகுப்பு நடத்தினர்.

4 தொழிலாளர் குறியீடுகளை நீக்குதல், 3 விவசாய சட்டங்களை ரத்து செய்தல், மின்சாரதிருத்த மசோதாவை ரத்து செய்தல், தனியார்மயமாக்கலை நிறுத்துதல், வருமான வரி வரம்புக்குள் இல்லாத குடும்பங்களுக்கு மாதா மாதம்ரூ.7500 வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியதிட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியதிட்டத்தை மீட்டமைத்தல், அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்குதல், உலகளாவிய இலவச சுகாதார திட்டத்தை செயல்படுத்துதல், இலவச கோவிட் மருந்துகளை வழங்குதல் என்ற முழக்கங்களின் கீழ் சிஐடியு அணிவகுப்பு நடைபெற்றது.

ரிலையன்ஸ் நிறுவனங்கள் இல்லாத மையங்களிலும் ஒருமைப்பாடு தெரிவித்து போராட்டங்களுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டன. சிஐடியு மாநிலத் தலைவர் ஆனத்தலவட்டம் ஆனந்தன், சிஐடியு தேசிய செயலாளர் கே.சந்திரன் பிள்ளை, மாநில துணைத் தலைவர் சி.கே. மணிசங்கர், மாநில செயலாளர் கே.என்.கோபிநாத், கே.டி. வின்சென்ட் ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.ஆர்.முரளீதரன் திரிபுனித்துராவில் உள்ள ரிலையன்ஸ் விற்பனை நிலையத்தில் போராட்டத்தை துவக்கி வைத்தார். பெரும்பவூரில் உள்ள ரிலையன்ஸ் பிஎம்எஸ் மாலுக்கான அணிவகுப்பை மாவட்ட இணைச் செயலாளர் என்.சி. மோகனன் தொடங்கி வைத்தார்.

முவாட்டுபுழாவில் நடைபெற்ற அணிவகுப்பை மாவட்ட துணைத் தலைவர் பி.எஸ்.மோகனன் தொடங்கி வைத்தார். பரவூரில் உள்ள ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்கான அணிவகுப்பை மாவட்ட துணைத் தலைவர் எம்.பி. சுயமந்தபத்ரன் தொடங்கிவைத்தார்.திரிக்ககர, கோலஞ்சேரி, ஆலுவா, கோதமங்கலம், கருவேலிபாடி, கூத்தாட்டுக்குளம், காலடி, பள்ளுருத்தி, ஆலங்காடு, வைபின், முளந்துருத்தி, அங்கமாலி, அத்தாணி ஆகிய இடங்களில் ஒருமைப்பாட்டு அணிவகுப்பு நடைபெற்றது.

;