tamilnadu

img

உலகின் 6-வது பெரிய எண்ணெய் நிறுவனமானது ரிலையன்ஸ்

புதுதில்லி:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, புதன்கிழமையன்று ரூ. 10 லட்சம் கோடியை எட்டியதன் மூலம்,அதன் உரிமையாளர் முகேஷ்அம்பானி, உலகப் பணக்காரர் கள் பட்டியலில் 12-வது இடத் திற்கு முன்னேறியுள்ளார். ரூ. 10 லட்சம் கோடி சந்தை மதிப்பைஎட்டும் முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையையும் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 13.70பில்லியன் டாலர் உயர்ந்து 58 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

110 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில்கேட்ஸ் முதல் இடத்திலும், 109 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் ஜெப்பிஸோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.இந்நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெருவாரியான வருவாய்க்கு அதன் எண்ணெய் வர்த்தகமே முக்கியக் காரணம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான பிபி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 132 பில்லியன் டாலராக உள்ள நிலையில், ரிலையன்ஸின் சந்தை மதிப்பு133 பில்லியன் டாலராக உயர்ந்துஉள்ளது. இதன் மூலம் உலகளாவிய எண்ணெய் நிறுவனங்கள் வரிசையில் 6-வது பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் மாறியுள்ளது.ஒரே நாளில், பிரிட்டிஷ் எரிசக்தி நிறுவனம், சீனா பெட்ரோலியம் கம்பெனி உள்ளிட்ட 6 நிறுவனங்களை ரிலையன்ஸ் பின் னுக்குத் தள்ளியுள்ளது.