states

img

வரிப் பகிர்வு, வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்

மேலும், இவ்விவகாரங்களை பேசித் தீர்ப்பதற்கான இடம், ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் நிதி ஆணையம் போன்றவையே என்  றும் கூறியுள்ளார். இந்த மன்றங்க ளில் பேசி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் வியா ழனன்று (ஜன.4) ‘வளர்ந்த இந் தியா, இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவி -மாநிலங்களுக்கான தாக் கங்கள்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் சுமன் பெர்ரி பேசி யுள்ளார். அப்போது, “பல பரிமாண வறுமைக் குறியீடு, நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் சுகா தாரத் துறை ஆகியவற்றில் கேர ளம் முதலிடத்தில் உள்ளது.

நாட்  பட்ட நோய்களை ஆரம்பத்தி லேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்  பதில் கேரளம் முன்னணியில் உள்  ளது” என்று பாராட்டிய பெர்ரி, “கல்வித் துறையின் சாதனைகள், அறிவு உருவாக்கம் மற்றும் புது மையான சிந்தனைகளுக்கு உத வும். உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உறுதி செய்வதன் மூலம் சிறந்த  பொருளாதார முன்னேற்றத்தை கேரளம் அடைய முடியும். புது மையான யோசனைகள் மற்றும்  ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை யில் மேலும் முன்னேற்றம் அடைய முடியும்” என்றார். “மக்கள்தொகை சார்ந்த பிரச்ச னைகள்தான் அடுத்த சவால் என் பதை கேரளம் வெகுகாலத்திற்கு முன்பே உணர்ந்தது.

இதனால் கேரளத்தில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. அது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், வேலைசெய்யும் வயது கொண்ட மக்கள் தொகை (20-34  வயது) குறைந்து வருவது கேரளம்  எதிர்கொள்ளும் சவாலாக உள் ளது” என்பதைச் சுட்டிக்காட்டிய பெர்ரி, ஒன்றிய அரசானது, கேரள  பொருளாதாரத்தின் கழுத்தை நெரிப்பது குறித்தான கேள்விக்கு, “ஒன்றிய அரசு நிதியை மையப்  படுத்துவதாகவும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் தென்னிந்திய மாநிலங்களுக்கு புகார்கள் உள்ளன” என்று மறை முகமாக உண்மையை ஒப்புக்  கொண்டார்.

எனினும், இப்பிரச்ச னைகளை ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் நிதி ஆணையத்தில் பேசியே தீர்வுகாண வேண்டும் என்றார். முதல்வருடன் சந்திப்பு முன்னதாக முதல்வர் பினராயி  விஜயன், நிதியமைச்சர் கே.என். பாலகோபால் மற்றும் அரசு உயர்  அதிகாரிகளுடன் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி  கலந்துரையாடினார். அப்போது, ஒன்றிய அரசின் நிலைப்பாடு கார ணமாக கேரளம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்- குறிப்பாக மாநி லத்தின் கடன் வரம்பு மற்றும் திட் டங்களில் ஒன்றிய அரசின் பங்கு குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, பெர்ரி உதவ வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜ யன் கேட்டுக் கொண்டார்.

நிலையான வளர்ச்சியை மன தில் கொண்டு, 2016 ஆம் ஆண்டு முதல் கேரள உட்கட்டமைப்பு முத லீட்டு நிதி வாரியம் (KIIFB) மூலம் மாநிலம் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. ஆனால், கேரளத்தின் கடன்  வரம்புக்கு ஒன்றிய அரசு கட்டுப் பாடுகளை விதித்தது. மேலும், கேர ளம் தனக்குரிய பங்கை ஒன்றிய அரசிடம் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்த சிக் கல்கள் கேரளத்திற்கு நிதி நெருக்க டியை ஏற்படுத்தியுள்ளது என்றும் பினராயி விஜயன் கூறினார்.