states

சொந்த வருவாய் வளர்ச்சி விகிதத்தில் கேரளா முன்னிலை

திருவனந்தபுரம் ஏப்., 9- ஒன்றிய தலைமைக் கணக்குத் தணிக்கை யாளர் (சிஏஜி), மாநிலங்களின் சொந்த வருவாய் வளர்ச்சி விகிதம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டார்.  இந்த ஆய்வறிக்கையில் இடது  ஜனநாயக முன்னணி ஆளும் கேரளா இரண்டா மிடம் பிடித்துள்ளது. மற்ற மாநிலங்களில் வருவாய் செலவினம் சராசரியாக 14.5%  ஆக அதிகரித்துள்ள நிலையில், கேரள மாநிலம் வருவாய் செலவினத்தை 5.6% அளவில் குறைத்து, 42.2% வரி வருவாய் வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் மொத்த வருவாய் வருமான வளர்ச்சி யிலும் 35.5 சதவீதத்துடன் கேரள மாநிலம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்த வருவாய் வருமான வளர்ச்சியில் கேரளாவின் தேசிய  சராசரி 25% ஆக உள்ள நிலையில், மற்ற மாநிலங்களின் வளர்ச்சி 12 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. மேலும் கேரளாவின் கடன் வளர்ச்சி விகிதம் 53.4% குறைந்துள்ளது. ஆனால் தேசிய அளவில் மற்ற மாநிலங்களின் கடன் சராசரியாக 20% அதிகரித்துள்ளது.

50 ஆண்டுக்கு பிறகு

கேரளாவின் வருவாய் பற்றாக்குறையின் செங்குத்தான வளர்ச்சி 1980-ஆம் ஆண்டுக்கு முன்பே தொடங்கியது. ஆனால் பொருளாதார குறிகாட்டிகள் எதிர் திசையில் இருப்பது இதுவே முதல் முறை. சுருக்கமாகச் சொன்னால் அரை  நூற்றாண்டு காலமாக (50 ஆண்டுகள்) அதி கரித்து வரும் கேரளாவின் வருவாய் - நிதிப்  பற்றாக்குறையின் அதிகரிப்பு விகிதம் கட்டுப்படு த்தப்பட்டுள்ளது என குலாத்தி இன்ஸ்டிடியூட் நிதி மற்றும் வரித்துறை இயக்குநர் பேராசிரியர் கே.ஜே.ஜோசப் கூறுகிறார். மகாராஷ்டிரா முதலிடம் நாட்டின் முக்கிய தொழில் வளர்ச்சி மையமான மகாராஷ்டிரா சொந்த வருவாய் வளர்ச்சி விகிதத்தில் 45.5% வளர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது.