states

img

கேரள உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்.... 82 பள்ளிகளுக்கு மேலும் ரூ.106.80 கோடி...

திருவனந்தபுரம்:
கேரளத்தில் 82 அரசுப்பள்ளி களில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்குரூ.106.8 கோடி அனுமதிக்கப் பட்டுள்ளது. பொதுக்கல்வி இயக்குநரகத்தின் திட்டநிதி யிலிருந்து 56 பள்ளிகளுக்குரூ.60 கோடியும், மேல்நிலை பள்ளிதிட்டநிதியிலிருந்து 15 பள்ளி களுக்கு ரூ.30 கோடியும், சிறப்புநிதியில் 11 பள்ளிகளுக்குரூ.16.85 கோடியும் அனுமதிக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் உள்ளிட்ட  செயல்முறைகள் உள்ளாட்சி தேர்தல்  அறிவிப்புக்குமுன்னர் முடிக்கப்பட்டது. இந்த பள்ளிகளுக்கு ரூ.45 லட்சம் முதல் ரூ.5 கோடி  வரை கிடைக்கும். முன்னதாக, அரசு அறிவித்துள்ள பொதுக்கல்வி பாதுகாப்பு திட்டத்தின் ஒருபகுதியாக 208 பள்ளிகளுக்கு உயர்தொழில்நுட்ப கட்டிடங்கள் மற்றும் நவீனவசதிகள் வழங்கப் பட்டன. 131 பள்ளி கட்டிடங்களும் கட்டுமானத்தில் உள்ளன. பள்ளிகளின் பட்டியல் பொதுக்கல்வி இயக்குநரின்
இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.