states

img

உக்ரைனிலிருந்து மீட்கப்படும் கேரள மக்களின் பயணச் செலவை அரசே ஏற்கும் – முதல்வர் பினராயி விஜயன்  

உக்ரைனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரும் கேரள மக்களின் பயணச் செலவை கேரள அரசே ஏற்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  

உக்ரைன் மீதான தாக்குதல் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இந்திய மாணவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தமிழ்நாடு, தெலங்கானாவை தொடர்ந்து உக்ரைனிலிருந்து மீட்கப்படும் கேரள மக்களின் பயணச் செலவை கேரள அரசே ஏற்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக கேரளம் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனில் சிக்கியுள்ள கேரளத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் கேரளம் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கேரளத்தைச் சேர்ந்த 2,320 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர்.  

அவர்களை அழைத்துவரப்படும் அனைத்து மாணவர்களுக்கான விமான பயணச் செலவுகளையும், தில்லி அல்லது மும்பையில் இருந்து கேரளத்திற்கு வரும் விமானச் செலவுகளையும் மாநில அரசே ஏற்கும் என்று சனிக்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

;