states

img

‘இயக்குநர் சச்சியின் மறைவு மாபெரும் இழப்பு’

திருவனந்தபுரம், ஜூலை 23- தேசிய திரைப்பட விருதுகள் வென்றவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரி வித்துள்ளார். சிறந்த இயக்குநர் விருது பெற்ற சச்சியின் மறைவு மாபெரும் இழப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள் ளார்.

3 விருதுகளை வென்ற அய்யப்பனும் கோஷியும்

மலையாளத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது அய்யப்பனும் கோஷியும் படத்தில் காவல்துறை அதி காரியாக நடித்த பிஜூ மேனனுக்கு அறி விக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த  படத்தின் இயக்குநர் மறைந்த சச்சிதா னந்தத்திற்கு தேசிய விருது அறிவிக் கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள களக்காத்த சந்தன மேரம் என்ற பாடலுக்கான சிறந்த  நாட்டுப்புற பாடகிக்கான தேசிய விருது நஞ்சியம்மாவுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.  அனூப் ராமகிருஷ்ணன் எழுதிய புத்தகத்திற்கு சிறந்த திரைப்பட புத்த கத்திற்கான தேசிய விருது அறிவிக் கப்பட்டுள்ளது. சிறந்த மலையாளப் படத்துக்கான விருது ‘திங்களாட்ச நிச்ச யம்’ என்கிற படத்துக்கு கிடைத்துள் ளது. அய்யப்பனும் கோஷியும் சிறந்த சண்டை காட்சிக்கான விருதையும் வென்றது. 68 ஆவது தேசிய திரைப்பட விருது கள் குறித்து முதல்வர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது: இம்முறை கேரள மக்களுக்கு 13 விருதுகள் வந்துள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருதை மரணத்திற்குப் பின் சச்சி பெற்றார். அவரது மறைவு மலையாளத் திரை யுலகிற்கு எவ்வளவு பெரிய இழப்பு  என்பதை இந்த அங்கீகாரம் நிரூ பிக்கிறது.  மலையாள சினிமாவுக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விசயம். விருது  பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். மலையாளத் திரையுலகம் தொடர்ந்து இதுபோன்ற சாதனைகளை படைக் கும் என்று நம்புகிறேன் என்று முதல்வர் கூறினார்.

கேரளம் வென்ற விருதுகள்

சிறந்த நடிகை: அபர்ணா பால முரளி (சூரரைப்போற்று), சிறந்த இயக்குநர்: சச்சி (அய்யப்பனும் கோஷியும்), சிறந்த துணை நடிகர்: பிஜூமேனன் (அய்யப்பனும் கோஷி யும்), சிறந்த பின்னணி பாடகி: நஞ்சி யம்மா (அய்யப்பனும் கோஷியும்), சிறந்த சண்டை இயக்கம்: மாபியா ஷஷி (அய்யப்பனும் கோஷியும்), சிறந்த மலையாளத் திரைப்படம்: சென்னா ஹெக்டேயின் ‘‘மண்டே டிடர்மினேஷன்’’, ஜூரியின் சிறப்புக் குறிப்பு: காவ்யா பிரகாஷ் இயக்கிய ‘‘வாங்க்’’, சிறந்த கல்வித் திரைப் படம்: நந்தன் இயக்கிய ‘‘ட்ரீமிங் ஆஃப் வேர்ட்ஸ்’’, சிறந்த திரைப்படம் அல்லாத படைப்பு: ஷோபா தரூர் சீனிவாசனின் ‘‘ராப்சோடி ஆஃப் ரெயின்ஸ்: தி மான்சூன் ஆஃப் கேரளா’’, திரைப்படம் அல்லாத பிரிவில் சிறந்த ஒளிப்பதிவாளர்: நிகில் எஸ் பிரவீன் (“ரிங்கிங் ப்ளஃப்”), சிறந்த திரைப்பட புத்தகம்: அனூப் ராம கிருஷ்ணனின் ‘‘எம்டி அனுபவங்க ளின் புத்தகம்’’, சிறந்த தயாரிப்பு வடிவ மைப்பு: அனீஸ் நடோடி (கபேலா), சிறந்த ஒலித்தொகுப்பு: ஸ்ரீசங்கர், விஷ்ணு கோவிந்த் (மாலிக்) என 13 மலையாளிகள் மற்றும் மலையாள படங்களுக்கு விருது கிடைத்துள்ளது.