states

img

சாலையை மூடி சிகிச்சை மறுத்தது கர்நாடகம்..... ஆக்சிஜன் கொடுத்து உயிர் காக்கிறது கேரளம்.....

திருவனந்தபுரம்:
கடந்த ஆண்டு கர்நாடக எல்லையில் மண்கொட்டி தடைசெய்யப் பட்ட சாலைகள் வழியாக அம்மாநிலத்திற்கு ஆக்சிஜன் அனுப்பி உயிர்மூச்சுக்கு கேரளம் உதவுகிறது.அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், கோவா ஆகியமாநிலங்களுக்கு கேரளா ஆக்சிஜன்வழங்குகிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தமிழ்நாட்டுக்கு 77 மெட்ரிக் டன். கர்நாடகாவுக்கு 16 மெட்ரிக்டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. விநியோகம் இன்னும் தொடர்கிறது.கடந்த ஆண்டு கேரளத்தில் கோவிட்தொற்று பரவல் அதிகரித்தபோது, கர்நாடக மாநிலம் தனது எல்லைகளை மண்கொட்டி மூடியது. அதன் மூலம் மங்களூர் பகுதியில் உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்களில் ஏற்றிச்செல்லப்பட்ட நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் இன்று அந்த சாலைகளில்தங்குதடையின்றி மனிதர்களுக் கான மூச்சுக்காற்றை டேங்கர்கள்சுமந்து சென்று கொண்டிருக்கின்றன.

வட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தநேரத்தில் உபரியாக உற்பத்தியாகும் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு கொடுத்து உதவுகிறது கேரளம். இது நாட்டுக்கே மற்றொருமுன்மாதிரியாகும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் அதிகமாக மருத்துவ ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் கேரளம். மருத்துவ ஆக்ஸிஜனை கஞ்சிக்கோடு ஐனாக்ஸ் ஏர் புராடக்ட், சவரா கேஎம்எம்எல் மற்றும் பராக்சேர் இந்தியா பிரைவேட் லிமிடெட்-எர்ணாகுளம் ஆகியவை மாநிலத்தில் மருத்துவ ஆக்கிஜன் உற்பத்தி செய்கின்றன.

கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கேரளத்திற்கு ஒருநாளைக்கு சுமார் 70 முதல் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கேரளத்தில் பல்வேறு மையங்களில் 150 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது என பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் (பெசோ) துணைதலைமை கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மாநில மருத்துவ ஆக்ஸிஜன் நோடல் அதிகாரி டாக்டர் எஸ்.கே. ஆர்வேணுகோபால் கூறினார். பெசோவின் கூற்றுப்படி, தற்போதைய ஆக்ஸிஜன் வழங்கல் சுகாதாரத் துறைக்கு மட்டுப்படுத்தப்பட் டுள்ளது. கோவிட் காலத்தில் கேஎம்எம்எல் ஒரு டன் மருத்துவ ஆக்ஸிஜனின் விலையை பல்லாயிரக்கணக்கில் குறைத்தது. ஹரியானா போன்ற மாநிலங்களில், ஒரு டன் ஆக்ஸிஜன் விலை ரூ.50,000ஆகும்.

ஆக்சிஜன் விநியோகத்தில் கே.எம்எம்எல் சாதனை
ஆறு மாதங்களில் சுமார் 1,000 டன் ஆக்சிஜன் மாநிலத்தின் சுகாதாரத் துறைக்கு வழங்கி கேஎம்எம்எல் ஆலை சாதனை படைத்துள்ளது.நாள் ஒன்றுக்கு 70 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் இந்த ஆலைக்கு உள்ளது.கடந்த அக்டோபரில் கேஎம்எம்எல் இன் தொழில்துறை தேவைகளுக்காக ஆக்சிஜன் ஆலை தொடங்கப்பட்ட போதிலும், அது இப்போது மாநிலத்தின் சுகாதாரத் துறைக்கு மிகவும் பயனளித்துள்ளது. கேஎம்எம்எல் செயல்பாட்டிற்கு தேவையான 63 டன்களில், மீதமுள்ள ஏழு டன்கள் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது.

;