திருவனந்தபுரம்:
சுற்றுச்சூழல், தொழிலாளர் நட்பு, மக்களுக்கு பாதுகாப்பு என்கிற முறையில் கேரள அரசின் நிகழ்ச்சி நிரல் முதலீட்டாளர்களை ஈர்க்கும் எனவும், தொழில்கள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்துள்ளார். இதற்காக, தொழில் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்படும். விரிவான வழிகாட்டுதல்கள் கேஎஸ்ஐடிசி அளிக்கும் என்றார்.
கேரள மாநில தொழில் வளர்ச்சி கழகம் (கே.எஸ்.ஐ.டி.சி), அதன் 60 ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்த மெய்நிகர் மாநாட்டை அமைச்சர் பி.ராஜீவ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தொழில்துறை வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பகுதி தீர்மானிக்கப்படும். தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்படும். சிறந்த உட்கட்டமைப்பு, குறைந்த எரிசக்தி விகிதங்கள் மற்றும் சிறந்த மனித சக்தி ஆகியவை கேரளாவுக்கு சாதகமாக உள்ளன. இவை உலகின் முன்பு காட்டி முதலீட்டுச் சூழல் உருவாக்கப்படும். சிறந்த சந்தை உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.கேஎஸ்ஐடிசி-யின் கடந்த 60 ஆண்டு சாதனைகள் குறித்த அறிக்கையை நிர்வாக இயக்குநர் எம்.டி.ராஜமணிக்கம் வழங்கினார். நிறுவன செயலாளர் கே.சுரேஷ் குமார்,கேஎஸ்ஐடிசி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இ.எஸ்.சம்நாத் உள்ளிட்டோர் பேசினர்.