states

img

பொதுத்துறையை பாதுகாத்த கேரள அரசு

ஒன்றிய அரசு கைவிட்ட காகித ஆலையை கைப்பற்றி வெற்றிகரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளது கேரள அரசு

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், கேரள அரசு வழங்கிய 700 ஏக்கரில் ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட்டை, பொதுத்துறை நிறுவனமாக 1983-இல் ஒன்றிய அரசு தொடங்கியது.

நிதி இழப்பைக் காரணம் காட்டி அதன் உற்பத்தி ஆலையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு மூடியது. மேலும், மூடிய அந்நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு இறங்கியது. இதனையடுத்து அந்நிறுவனத்தை கேரள அரசு கையகப்படுத்தியது.

ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட் நிறுவனம் கடந்த ஜனவரி 1 முதல் கேரள பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட்(கேபிபிஎல்) என்கிற பெயர் மாற்றத்துடன் செயல்படத் தொடங்கியது.

இந்நிறுவனம் முழுமையாக செயல்படும் போது 3,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வழங்க முடியும், மே மாதம் கேரள முதல்வர் பினராயி இந்த ஆலையை முறைப்படி திறந்து வைப்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில், கேரள பேப்பர் புராடக்ட்ஸ் லிமிடெட் என்கிற காகித ஆலையை முறைப்படி கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழன்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில், கேரள காகித நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது. பொதுத்துறையாக இருந்த இந்த ஆலையை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்தது. கேரள அரசாங்கம் அதனை வாங்கி மாற்றங்கள் செய்து இப்பொழுது மாநில அரசின் நிறுவனமாக செயல்படுகிறது.

பொதுத்துறை பாதுகாப்பு என்பது நமது கொள்கை, இந்தியாவிலேயே இது மிகப்பெரிய காகிதம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருக்கும் என அதில் தெரிவித்துள்ளார்.

;