states

img

வீடில்லாதவர்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்த கேரள அரசு!

கேரள அரசு கேர் ஹோம் திட்டத்தின் மூலம் 40 வீடுகளை கட்டிமுடித்து வீடில்லாதவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

இதில், விளையாட்டு மைதானம், பூங்கா, நூலகம், வாகன நிறுத்துமிடம், சமுதாய கூடம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆகியவை அடங்கும்.

கேரளத்தில் இரண்டாவது முறையாக, பினராயி விஜயன் தலைமையிலான அரசு பதவியேற்றபின் 100 நாள் நூறு திட்டங்கள் என்ற முழக்கத்தின் கீழ் பல்வேறு அறிவுப்புகள் வெளியிடப்பட்டன. அதில் இடது ஜனநாயக முன்னணி அரசானது, 90 நாட்களில் 58 ஆயிரத்து 301 பேருக்கு வேலைவாய்ப்புகளை சாதனை படைத்தது.

தொடர்ந்து அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கும் கேரள அரசு சமீபத்திய நிதி ஆயோக்கின் ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவிலேயே ஏழ்மை நிலை குறைவாக உள்ள மாநிலங்களில் கேரள முதலிடம் பிடித்தது. மேலும், ஊட்டசத்து, குழந்தை இறப்பு விகிதம், கல்வி, சுகாதாரம் என பல துறைகளில் கேரள அரசு சிறந்து விளங்குகிறது என ஆய்வு முடிவுகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கேரள பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் வீடுகளை இழந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் கேரள அரசு வீடுகளை கட்டி வருகிறது.அதன் ஒரு பகுதியாக தற்போது கேர் கோம் திட்டம் மூலம் வீடற்றவர்களுக்கு 40 வீடுகளை கட்டி ஒப்படைத்திருக்கிறது கேரள அரசு.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவு செய்துள்ள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் வீடில்லாதவர்கள்  என்ற நிலையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் முக்கியமான உத்வேகம் இது என்று ட்வீட் செய்துள்ளார்.

 

;