கோழிக்கோடு கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல் மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 30 அன்று அதிகாலை பயங்கர நிலச் சரிவு ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் தூக்கக் கலக்கத்தி லேயே முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதி மக்கள் மண்ணில் புதைந்தனர். தகவலறிந்த கேரள காவல்துறையினர், தீயணைப்பு படையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் ராணுவம், கடற்படை, விமானப் படை என பல்வேறு தரப்பினரும் மீட்பு பணியை உடனடியாக தொட ங்கினர். மூன்றாவது நாளாக மீட்பு பணி மேற்கொண்டு வரும் நிலை யில், வியாழனன்று மாலை 6 மணி நிலவரப்படி வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. 77 ஆண்கள், 67 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் உட்பட 96 பேரின் உடல்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. 166 சட லங்கள் பிரேத பரிசோதனை செய் யப்பட்ட நிலையில், அதில் 75 சட லங்கள் உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து 1,000-க் கும் மேற்பட்டோர் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலை யில், காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது.
மிரட்டும் மழை
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் சேறு, சகதி, பாறைகள் என மூன்றும் சேர்ந்து இருப்பதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது என மீட்புப் பணி ஒருங்கிணைப்பு குழு அதி காரிகள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், ஜூலை 31 அன்று மீண் டும் சிவப்பு எச்சரிக்கை அளவில் கனமழை பெய்தது. இதனால் மீட் புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள் ளது.
அமித்ஷாவின் அறிக்கை துரதிருஷ்டவசமானது
கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்டனம்
வயநாடு நிலச்சரிவு விவகா ரம் தொடர்பாக மாநிலங்க ளவையில் நடைபெற்ற விவா தத்தில் எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு பதில் அளித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கையை ஒன்றிய அரசு கடந்த ஜூலை 23 அன்றே வழங் கியது. ஜூலை 26 அன்று அனுப் பப்பட்ட செய்தியில், 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என் றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு கள் இருப்பதாகவும், சேறும் சகதியுமாக மழைநீர் வரலாம் என்றும், அதில் புதைந்து மக்கள் உயிரிழக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னரே எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோச மாகியிருக்காது. தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங் கள். கூச்சலிடாதீர்கள்” என்று கூறினார்.
பினராயி விஜயன் பதிலடி
அமித் ஷாவின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜ யன், “இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத் துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. எனினும் வயநாட்டில் 500 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக அதிகம். செவ்வாயன்று காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின் னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டது. குற்றம்சாட்டுவதற் கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ள வில்லை” எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
வீணா ஜார்ஜ்
பினராயி விஜயனை தொட ர்ந்து கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜூம் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”ஒன்றிய அரசின் அனைத்து தகவல் தொடர்புகளையும் நாங்கள் சரி பார்த்துள்ளோம். மேலும் நிலச் சரிவுகள் தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை எதுவும் வெளியிடப் படவில்லை. வயநாடு மாவட்ட நிர்வாகம் ஒன்றிய அரசு வழங் கிய ஆரஞ்சு எச்சரிக்கையின் அடிப்படையில் மட்டுமே செயல்பட்டது. நிலச்சரிவுக் கான சிவப்பு எச்சரிக்கை எது வும் ஒன்றிய அரசால் வெளியி டப் படவில்லை. ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வின் அறிக்கை துரதிருஷ்டவச மானது. மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனைத்து தரவுகளும் உள் ளன. தவறான அறிக்கைகளை வெளியிட வேண்டாம்” என கூறி யுள்ளார்.
வயநாட்டில் பினராயி விஜயன்
பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் ஆய்வு
கேரள முதல்வர் பினராயி விஜயன் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட் டிற்கு வியாழனன்று மதியம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை ஆகிய பகுதிகளில் நேரடி யாக ஆய்வு செய்து, மீட்பு பணி தொடர்பான நிலவரங்களை கேட்ட றிந்தார். தொடர்ந்து சூரல்மலையில் மக்களை மீட்க ராணுவத்தினர் கட்டி வரும் பெய்லி பாலத்தையும் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு செய்த நிலையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து முதல்வர் பினராயி விஜயன் ஆறுதல் கூறினார்.
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்
கேரள முதல்வர் கோரிக்கை
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜ யன் தலைமையில் வயநாட்டில் வியாழனன்று அனைத் துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பின ராயி விஜயன் செய்தியாளர்களுக்கு சந்திப்பில் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். முண்டக்கை பகுதியில் உயி ருடன் இருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர். மாயமான வர்களை மட்டும் தேடி வருகிறோம். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வர்கள், பெண்கள், சிறார்கள், உறவினர்களை இழந்தவர்களுக்கு மன நல ஆலோசனை அளிக்கப்படும். வயநாடு பேரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.
நிலைமை சரியில்லை
உதவி செய்ய யாரும் வயநாடு வர வேண்டாம்
நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு வயநாட்டில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தாலும் மேற்கொண்டு நிலச்சரிவு எதுவும் ஏற்பட வில்லை. ஆனால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை கணிக்க முடியாத அளவிற்கு பெய்து வருகிறது. இதனால் நிலச் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் அவ்வப்போது பதற்றமான சூழல் ஏற்பட்டு வரும் நிலையில், மீட்புப் பணி மற்றும் மக்களுக்கு உதவி செய்ய கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலிருந்து தன்னார்வ லர்கள், சமூக சேவையில் நாட்டம் கொண்டவர்கள் வயநாடு நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,”வயநாட்டில் நிலைமை சரியில்லை, உதவி செய்ய யாரும் வயநாடு வர வேண்டாம்” என கேரள முதல்வர் பின ராயி விஜயன் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”நிலச்சரிவில் உயிர்பிழைத்து முகாம்களில் உள்ள வர்கள் அனைவரும் பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு முகாம்களில் இருக்கக் கூடும். முகாம்களில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரை காணவில்லை என தேடிப்போக வேண்டாம். பட்டியல் தாருங்கள். நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம். மீட்புப் பணி முடக்கிவிடப் பட்டுள்ளது. குறிப்பாக மீட்புப் பணி தொடர்பாக அனைத்து வேலை களும் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போ தைய சூழலில் வயநாட்டில் நிலைமை சரியில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருவோர் நேரடியாக வய நாடு வர வேண்டாம்” கேட்டுக் கொண்டார்.