states

img

வகுப்புவாதத்துக்கு எதிராக நிலையான போராட்டம் தேவை: எம்.ஏ.பேபி

திருவனந்தபுரம், ஜுன் 16- கேரள சமுதாயத்தில் சங்பரிவார்  வகுப்புவாத திட்டமும், அதை எதிர்ப்பது என்ற பெயரில் சிறுபான்மை வகுப்பு வாத தீவிரவாத இயக்கங்களும் மக்கள்  மனதில் பெரும் பிளவை ஏற்படுத்தி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி கூறினார். ‘கலாச்சாரம், ஊடகம், மொழி’ என்ற தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பி த்து எம்.ஏ.பேபி மேலும் பேசியதாவது:  மதவாதம், சாதிவெறி, எதேச்சதிகார  மனநிலையும் நிலப்பிரபுத்துவப் போக்கு களும் வெளிப்படையாகவும் மறைவாக வும் வெளிப்படுகின்றன. இதற்கு எதி ராக கடுமையாகவும் தொடர்ச்சியாக வும் போராட்டம் நடத்தப்பட வேண்டும். கலையின் வணிகமயமாக்கல் முன்வைக்கும் சவால் தீவிரமானது. ஊடகங்கள் முதலாளித்துவ மற்றும் வகுப்புவாத சக்திகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளன. அதிகார வர்க்கங்களின் தேவைகளை நிறை வேற்றும் ஊடகங்களே பெரும்பாலா னவை. முற்போக்கு இயக்கங்களை அவ மதிப்பதும், அவர்களுக்கு எதிராகக் கதைகளைப் புனைவதுமே இவர்களின் பக்தி வேலை. அமெரிக்காவில் உள்ள தைப் போல, அறிக்கையின் உண்மைத் தன்மையையும் துல்லியத்தையும் சரி பார்க்க, சுதந்திரமான கண்காணிப்புக் குழு போன்ற சாத்தியக்கூறுகளை நாம் முயற்சிக்க வேண்டும். சமூக ஊடகங் களை ஜனநாயகப் போராட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். மலையாளப் பல்கலைக்கழகம், கேரள கலாமண்டலம், கேரளாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங் களின் மொழிப் பிரிவுகள், சாகித்திய அகாடமி, மொழி பயிலகம், என்சைக் ளோபீடியா செல் மற்றும் குழந்தைகள் இலக்கிய நிறுவனம் இணைந்து கலாச் சாரம், ஊடகம் மற்றும் மொழி ஆகிய துறைகள் இணைந்து தற்போதைய சிக்கல்கள் மற்றும் துறைகளில் உள்ள வரம்புகளை சமாளிக்க ஒரு முழுமையான கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டும். கலாச்சாரம், ஊடகம் மற்றும் மொழி துறைகள்.  இதுபோன்ற தலையீடுகளை எளிதாக்கும் வகையில், இரண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை கலாச்சார கூட்ட த்தை ஏற்பாடு செய்யலாம் என்றார்.

;