சென்னை, மே 19- தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் இயல்பைவிட அதிகரித்தது. அதுவும் கோடையின் உச்சபட்ச வெப்பமான அக்னி நட் சத்திரம் துவங்கும் முன்பாக வெயில் வாட்டி வதைத்தது. வரலாறு காணாத அளவுக்கு பல மாவட்டங்களில் 119 டிகிரி வரைக்கும் கொளுத்தியது. இந்த நிலையில், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரு வதால் தமிழ்நாட்டின் அனேக இடங் களில் இடி மின்னல் மற்றும் பலத் தக் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவண்ணா மலை, கன்னியாகுமரி, கிருஷ்ண கிரி, திருப்பத்தூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது.
சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு...
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்பதால் உதகை, கொடைக்கானல், ஒகே னக்கல், தேக்கடி, தென்காசி உள் ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல் வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசின் பேரிடர் மேலா ண்மை துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற் றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 2 கோடி செல்போன் நம்பர்களுக்கு பொதுவான முன் னெச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
முன்னெச்சரிக்கை
குமரிக் கடல், மன்னார் வளை குடா மற்றும் அதனை அடுத்துள்ள தென் தமிழக கடலோரப் பகுதி களில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக் கூடும். இதனால் மீனவர்கள் கட லுக்கு செல்ல வேண்டாம். மேலும், 20 முதல் மே 22 ஆம் தேதி வரைக்கும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்ததையடுத்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளு டன் மாவட்ட ஆட்சியர்கள் ஆலோ சனை நடத்தியுள்ளனர். இதைய டுத்து, பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே பருவமழை காலங்களில் வெள்ளத்தால் பாதிக் கக்கூடிய பகுதிகளாக கண்ட றியப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உடனடியாக எச்ச ரிக்கை அறிவிப்புகள் தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறை
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாந கராட்சி மற்றும் நகராட்சி அலுவல கங்களில் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் செயல்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மழை பாதிப்பு மற்றும் மழை தொடர்பான உதவிகள் குறித்து கட்டுப்பாட்டு தொலைபேசி மற்றும் செல்லிடைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவல்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு தகவல் தெரிவித்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்கள் கனமழை காரணமாக பாதிப்பு கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பாதுகாப்பாக தங்க வைப்ப தற்கு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த கட்டிடத்தின் உறுதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நிவாரண மையங்களில் குடிநீர், மின்சாரம், ஜெனரேட்டர், டீசல், மளி கைப் பொருட்கள், படுக்கை விரிப்பு கள், மெழுகுவர்த்திகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு உணவு
முகாம்களில் தங்கும் பொதுமக்க ளுக்கு உணவு வழங்குவதற்கு தேவையான பொருட்களை வழங்க மொத்த வியாபாரிகளை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண் டும் எனவும் ஆட்சியர்கள் மூலம் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மீட்பு பணி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை யினர் படகு போன்ற மீட்பு பணிக்கான சாதனங்கள் மற்றும் வீரர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் நீச்சல் தெரிந்தவர்கள், மழை வெள்ளத்தில் சாலையில் சாய்ந்து விழுந்த மரங்களை உடனடியாக அகற்ற மரம் வெட்டுபவர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள், வயர்களை உடனடியாக அகற்றி மின் சாரம் தடையின்றி வழங்க, மின்கம் பங்கள், மின்மாற்றிகள், வயர்கள் மற் றும் தேவையான பணியாளர்களுடன் மின்வாரிய அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
குடிநீர் விநியோகம்
மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கழிவு நீர் செல்வதற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக் காக அனைத்து உள்ளாட்சி அமைப்பு களும் மணல் மூட்டைகள் தயார் நிலை யில் வைத்திருக்க வேண்டும். குளம், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட் டால், சாலைகள் மற்றும் பாலங்கள் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உட னடியாக சீரமைக்க ஜேசிபி வாகனம் தயார் நிலையில் வைத்திருக்க வேண் டும் என்று தெரிவித்திருக்கிறது. பாதுகாப்பு அணைகள், ஆறு, ஏரி, குளம் மற் றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் வரும் வெள்ள நீரை வேடிக்கை பார்க் கவோ, குளிக்கவோ குழந்தைகளை அனுமதிக்க கூடாது என்பது குறித்து பெற்றோர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதிக மழைப்பொழிவு ஏற்பட்டா லும். வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
விரைந்தது மீட்பு படை
கனமழை எச்சரிக்கையைத் தொட ர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை யில் சேர்ந்த 296 வீரர்கள் அடங்கிய 9 குழுக்கள் கன்னியாகுமரி, திரு நெல்வேலி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக் கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளன.
உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங் களில் கோடை மழை கனமழையாக பெய்து வருகிறது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உரு வாக வாய்ப்பு இருப்பதாகவும் இந் திய வானிலை மையம் தெரிவித்துளளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம், வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிற 24 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி யால் தமிழகத்தில் மேலும் மழை பெய்யுமா என்பது தெரியவரும்.