states

img

முதலாம் ஆண்டு நிறைவை நோக்கி பினராயி அரசு

திருவனந்தபுரம், பிப்.10- இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலாம் ஆண்டு நிறைவை ஒட்டி 100 நாள் செயல் திட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இதுகுறித்து கேரள முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேலும் கூறியதாவது:  முதலாம் ஆண்டு நிறைவு  நாளான மே 20 வரை 100 நாட்களுக்கான செயல் திட்டம் அறிவிக்கப்படுகிறது. இதன்படி 1557 திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்காக, 17,183 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகள் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உரு வாக்கும் திட்டங்கள் செயல் படுத்தப்படும். வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் கட்டுமானத் துறையில் இருக்கும். 140 தொகுதிகளில் தலா 100 வீடுகளுக்கு இலவச இணைய சேவை யை கே-போன் திட்டம் வழங் கும். 30,000 அரசு அலு வலகங்களில் கே-போன் இணைப்பு செயல்படுத்தப் படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.