states

img

கும்பளங்காடு உன்னிகிருஷ்ணனுக்கு பாராட்டு

கேரள கலாச்சார அமைச்சகத்தின்  கீழ் செயல்படும் ‘மலையாளம் மிஷன்’ அமைப்பில் தமிழ்நாடு பிரிவு செயலாளராக பணியாற்றி வருபவர் கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன். அவரது சேவையை பாராட்டி அண்மையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘பாஷா மயூரம்’ விருதை  வழங்கி பாராட்டினார். விருது பெற்ற கும்பளங்காடு உன்னிகிருஷ்ணனுக்கு வியாழனன்று (மார்ச் 14) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், கேரள சமாஜம் தலைவர் டி.அனந்தன் உள்ளிட்டோர் உள்ளனர்.