states

img

லோக்ஆயுக்தா அவசரச் சட்டத்தில் திருத்தம் கையெழுத்திட்டார் ஆளுநர் ஆரீப் முகமதுகான்

திருவனந்தபுரம், பிப். 7-   லோக்ஆயுக்தா திருத்தச் சட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் கையெழுத்திட்டார். இதன் மூலம் இச்சட்டம் அமலுக்கு வந்தது. சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற முதல்வர் பினராயி விஜயன், நாடு திரும்பியதும் ஞாயிறன்று (பிப்.6) ஆளுநரை சந்தித்துப் பேசினார். லோக்ஆயுக்தாவின் 14 ஆவது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்பதால் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டதாக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஜியிடம் சட்ட ஆலோ சனை பெறப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தம் செய்ய  மாநிலத்துக்கு உரிமை உள்ளது என்று  தொழில் துறை மற்றும் சட்ட அமைச்சர் பி.ராஜீவ் ஏற்கனவே கூறியிருந்தார். 2013இல் இந்திய நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறியது. அனைத்து மாநிலங்களும் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மசோதாவின் 3ஆவது பகுதி குறிப்பிடுகிறது. அவ்வாறு மாநில சட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய மாதிரியையும் மசோதா உள்ளடக்கியது. ஆனால் மக்களவையில் இந்த மசோதா விவாதம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டபோது அதில் திருத்தம் செய்யப்பட்டது. ஒன்றிய மசோதாவில் வரையறுக்கப்பட்டுள்ள மாநில சட்ட மாதிரி, ஒப்புதல் அளித்த  மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று திருத்தம் செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வடிவத்தில் மாநி லங்கள் சட்டங்களை இயற்றுவது மாநில அதிகாரத்தின் மீதான அத்து மீறலாக இருக்கும் என்பதால், மாநி லங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களவை தேர்வுக் குழுவும் கருத்து தெரி வித்துள்ளதாக பி. ராஜீவ்கூறியிருந்தார்.