உலக சினிமா, Female Gaze, (Mapping Power and Space)லத்தீன் அமெரிக்க சினிமா,Country focus-கியூபா, தற்போதைய இந்திய சினிமா, இன்றைய மலையாள சினிமா, மிருணாள் சென் மற்றும் போலந்து இயக்குநர் கிறிஸ்டோப் சனுசி-ன் Retrospective சினிமா, உள்ளிட்ட 20 வகைமைகளில், 175-க்கும் மேற்பட்ட உலகின் உன்னத திரைப்படங்கள்! 14 திரையரங்குகள்! முன்பதிவு வசதி! பார்வையாளர்களின் வரிசையில் முதியோருக்கு முன்னுரிமை! பங்கேற்றோரில் 90% இளைஞர்கள்! இத்தனை சிறப்பு அம்சங்களை உள்ளடக்கி 28வது திருவனந்தபுரம் உலகத் திரைப்பட விழா, 2023 டிசம்பர் 8 முதல் 15 வரை இனிதே நடந்தேறியது. “வேறு எந்த உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்படாத, பாலத்தீனிய மக்களின் இறையாண்மை யை போற்றும் பல படங்கள் திரையிடப்படுவதால், நமது தார்மீக ஆதரவை அம்மக்களுக்கு தெரிவிக்கின்ற வாய்ப்பை இவ்விழா ஏற்படுத்தியுள்ளது”,என்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன். “அன்பும்,மானுட வெளிச்சமுமே” சினிமாவின் மொழி எனக் குறிப்பிட்டார் கென்ய பெண் இயக்குனர் வனூரி ஹைகூ”. புகழ்பெற்ற நடிகர் நானா படேகர் குத்து விளக்கேற்ற விழாத் துவங்கியது. நிறைவு நாளில் முற்போக்கு நடிகர் பிரகாஷ் ராஜ், ”கட வுளை அரசியலில் ஈடுபடுத்தாத,கடவுளின் சொந்த தேசம், கேரளா”எனப் புகழ்ந்தார். “ஸ்பிரிட் ஆஃப் சினிமா”என்ற விருது கென்ய பெண் இயக்குனர் வனூரி ஹைகூ-கு வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
போலந்து இயக்குநர் கிறிஸ்டோப் சனுசி-கு வழங்கப் பட்டது. Evil does not exist என்ற ஜப்பானிய படத்திற்கு சிறந்த படத்திற்கான Golden Crow Pheasant (சுவர்ண சகோரம்) விருது வழங்கப்பட்டது. துவக்கப் படம், “Goodbye Julia” என்ற சூடான் நாட்டுப் படம். ஒரே சூடான் நாட்டில், வடக்கு, தெற்கு என முறையே முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வாழ்கின்றப் பகுதிகள்,இரு சூடானாகப் பிரிந்து கிடக்கிறது. அடிக்கடி இனமோதல்கள் வெடிக்கின்றன. கிறிஸ்தவரான ஜூலியோவின் கணவன் சாவுக்கு,முஸ்லீம் மோனா காரணமாகிறாள்.இரக்க உணர்வுள்ள மோனாவுக்கு ஏற்படும் குற்ற உணர்வால், ஜூலியோக்கும் அவளது மகனுக்கும் தனது வீட்டில் அடைக்கலமளிக்கிறாள். படிக்கவும் உதவுகிறாள்.உண்மை ஜூலியோவுக்கு தெரிய வரும்போது,சூடான் பிரிவுக்கான கருத்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது.தென் பகுதியை கிறிஸ்தவர்களுக்கு பிரித்திட வாக்கெடுப்பு வழி வகுக்கிறது. மோனாவின் குற்ற உணர்வும்,அவளின் மீதான ஜூலியோவின் ஆற்றமுடியாதக் கோபமும் நாடு இரண்டாகப் பிரிகையில்,எப்படி வடிவெடுக்கிறது என்பதை மிகச் சிறப்பாக இப்படம் முன்நிறுத்துகிறது.
பட நிறைவில் பார்வையாளர்கள் ஒரு சேர கரஓசை எழுப்பி பாராட்டினர். உலக சினிமா பிரிவின் கீழ் இந்திய படம் “Follower”.இயக்குநர் ஹர்ஷத் நலவாட்.கர்நாடக, மகாராஷ்டிரா எல்லை நகரமான பெல்காம்-ல் சரிபாதியாக மராத்தியர்,கன்னடியர் வசிக்கின்றனர்.இம்மக்களுக் கிடையே பிரிவை விதைத்து,வளர்த்து கொண்டிருக்கும் சங்கிகளின் விஷ வளையத்தில் விழுகிறான் பொறியாளர் ரகு.இதனால் இவனது குடும்ப உறவுகள்,நட்பு மற்றும் காதலில் ஏற்படும் பாதிப்புகளை பேசுவதோடு; நகரம் பன்னெடுங்காலமாக இனவெறியால் தீர்வின்றி பிரிந்து கிடப்பதை; சினிமா மொழியில் சிறப்பாக முன்வைக்கிறது.இன மோதல்,நமது பக்கத்து மாநிலமான கர்நாடாகாவில், தீக்கங்காக கணன்று கொண்டிருப்பதை சிறப்பாக உணர்த்தியுள்ளது. மதம்,சாதி அடுத்து இனவெறி என்ற,மூன்றாவது அபாயத்தையும் இப்படம் சுட்டிக்காட்டியுள்ளது.Crowd funding-கிற்கு கன்னட ரும், மராத்தியருமே உதவியதாக, இயக்குநர் நேரில் கூறி யது, இங்கு குறிப்பிடத்தக்கது. “ஆல் தி சைலன்ஸ்” ஒரு மெக்சிகன் படம்.கேட்கும் சக்தி சிறிது சிறிதாக குறைந்து முழுமையாகச் செவிடாகும் மிரியம் என்ற பெண்ணின் துயரத்தை உதறும் நம்பிக்கையோடு சித்தரிக்கிறது.
இயக்குனர் டியாகோ டெல் ரியோ, பார்வையாளர்களுடன் உரையாடுகையில்,திரைக்கதை எழுதி படமாக்க ஒன்பது வருடங்கள் எடுத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார். Monster என்ற ஜப்பானிய படம் நாம் காணத் தவறு கின்ற சமகாலக் குழந்தைகளின் மன உலகை அழகியலாக விரித்துக் காண்பிக்கிறது. Perfect days என்ற ஜப்பானிய படம் டோக்கியோ நகரின் கழிவறைகளை சுத்தம் செய்யும் ஹிராயமா பற்றியது.இவர் புத்தக வாசிப்பு, மரங்களின் மீதான காதல்,இசை ரசனை அனைத்திலும் முழு நிறைவைக் காண்பவர்.தனித்து வாழ்கின்ற ஹிராயமாவின் கச்சிதமான செயல்பாட்டால், வாழ்வை புதிய கோணத்தில் அணுகுகின்றார்.”இவ்வுலகம் பல உயிரினங்களின் உலகங்களால் ஆனது. இதில் சிலவற்றிற்கு இணைப்பு இருக்கலாம். சில தனித்தே இயங்கலாம். உறவுகளிடமிருந்து தூரத்தை கடைப்பிடிப்பதே சரியானது”என்ற ஆழமான ஹிராயமாவின் வசனம் தத்துவார்த்தமானது. “Inshallah a boy”அரபு நாட்டு படம். திடீரென கண வனை இழக்கிறாள் இளவயது நவால். கணவனின் வாரிசு ரிமை சொத்துகளை மீட்டெடுக்க, அடிப்படைவாதிகளுக்கு இடையே,தனி மனுசியாக எதிர்நீச்சல் போடுகிறாள்.நீதி மன்றத்தில்,தனது இறந்த கணவனால் கருவுற்றது அறி யாமல்,கருச் சோதனை செய்யாமலே, கருத்தரித்திருப்பதாக சொத்துக்காகப் போலிச் சான்று கொடுக்கிறாள்.விசாரிக்கும் நீதிமன்றம் , அரசு ஆய்வகத்தில் சோதனையிட ஆணையிடு கிறது. அவ்வாறு சோதனை செய்கையில், உண்மையாக கருத்தரிதிருப்பது தெரியவர, நவால் விரும்பும் திருப்பம் நேர்கிறது.பெண் ஒடுக்குமுறையை இயல்பாக முன் வைக்கிற படம்.
“Evil does not exist”ஜப்பானிய படம். தாகுமி தனது மகள் ஹானாவுடன் மரங்கள் அடர்ந்த வனத்தையொட்டிய மிட்ஷுபிஹி கிராமத்தில் வசிக்கிறார். Glamping என்ற “கண்கவர் முகாம்” இவ்வனத்தில் அமைப்பதற்கு பன்னாட்டு நிறுவனம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துகிறது. நீர் வளம்,அரிய வகை மானினம் அழியுமென்று,இம்முயற்சிக்கு கிராம மக்கள் ஒன்றாக எதிர்க்கிறார்கள். பன்னாட்டு நிறுவனம் ஊரை இரண்டாக்க முயல்கிறது.தாகுமிக்கு வலை விரிக்கிறது.தனது மகளை விடக் காட்டை உயிராக நேசிக்கும் தாகுமி இதனை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை அற்புதமாக பேசுகிறது.கார்பரேட் ஊழியர்கள் கருத்து கேட்பு கூட்டம் என்ற பெயரில் மக்களை எப்படி யெல்லாம் வார்த்தை ஜாலங்கள் பேசி மயக்க முயற்சிக் கிறார்கள்:அந்த ஊழியர்களை நிறுவனம் எவ்வாறு மூளைச்சலவை செய்து களத்திற்கு அனுப்புகிறது என்பதையும், தெளிவாக விளக்குகிறது இப்படம். Junks and Dolls என்ற ஈரானியப் படம், வட ஈரானியப்பகுதி யைச் சார்ந்த காட்டோரத்தில் அமைந்துள்ள நகரக் குப்பை மேட்டை பராமரிக்கும் குழந்தையற்ற தம்பதியின் நிரந்தர மற்ற குப்பை வாழ்வை, நம்பிக்கை திரவியத்தோடு பேசு கிறது.
“Hanging Garden” என்ற ஈராக்கிய படம், அமெரிக்கா வால் சிதைக்கப்பட்ட ஈராக்கிய நகரின் குப்பை மேடுகளில் கந்தல்களைப் பொறுக்கும் தகப்பன்,மகனின் வாழ்வை,மத அடிப்படைவாதம் எவ்வாறு கொடுமையாக கோலேச்சி சிதைக்கிறது என்பதனை பிட்டு வைக்கிறது. “The Rapture” பிரெஞ்சு நாட்டு படம்.பாரீஸில் தஞ்சம டைந்து வாழும் மருத்துவச்சி லிடியாவின் கதை. தோழி யின் குழந்தையோடு லிடியா இருக்கையில் பிரிந்த காத லனை தற்செயலாக சந்திக்கிறாள். அப்போது அக்குழந்தை தனக்கும், காதலனுக்கும் பிறந்ததாக ஏதேச்சையாக அவ னிடம் பொய் சொல்கிறாள். காதலனும் நம்புகிறான்.பொய்யை மெய்யாக்க,குழந்தையை தோழிக்குத் தெரியா மல் அடிக்கடி கடத்தி வந்து காதலனிடம் காட்டி,பாசத்தை ஊட்டுகிறாள்.காதலனின் குடும்பத்தார்களையும் நம்ப வைக்கிறாள்.குழந்தையை கடத்தியமைக்கு,தோழி புகாரளிக்க, லிடியா கைதாகிறாள்.அன்பிற்காக ஏங்கும் லிடியா,அதை அடைய எதையும் செய்கிறாள். ஆனால் காதலனோ,பொய் பேசிய லிடியாவின் பேரன்பை புரிந்து இறுதியில் அவளை ஏற்றுக் கொள்கிறான். “The Last Birthday” ஆப்கன் திரைப்படம்.காபூலில் வாழும், பிற்போக்கை எதிர்க்கும் ஷோரயாவைப் பற்றியது. இவள் தனது கணவன், மற்றும் நண்பர்களோடு பிறந்த நாளை வீட்டில் கொண்டாடுகிறார். தாலிபான்கள் விரை வில் காபூலை கைப்பற்றக் கூடிய சூழல். விழாவில் கலந்து கொண்ட நண்பர்கள் தலிபன்களிடமிருந்து தப்பிக்க, ஒவ்வொருவராகத் ஷோரயாவிடம் பிரியா விடையளித்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இறுதியில் ஷோரயா வும்,ஒரு அனாதைக் குழந்தையுமே மிஞ்சுகிறார்கள். வீட்டை தலிபான் படைகள் சூழ,ஷோரயா என்ன செய்தாள்? எதிர்பாரா அதிர்ச்சி தரும் முடிவு, அனைவரையும் உறைநிலைக்குத் தள்ளுகிறது.மதவெறிபிடித்த ஆட்சியில் பெண்கள் தான் முதல் பலி,என்பதை மரண ஓலத்தோடு சொல்கிறது.80 நிமிடம் ஓடும் இப்படத்தில், கேமரா வீட்டை விட்டு வெளியே செல்லாமலே, பார்வையாளர்களை பதைபதைக்கச் வைக்கிறது. மாவோயிஸ்ட் அரசியலைப் பேசுகிறது Ambush என்ற இந்தியப் படம்.
Critical zone என்ற ஈரானியப் படம்,டெஹ்ரான் நகரில் தனித்து வாழும் போதைப்பொருளுக்கு அடிமையான அமீரைப் பற்றியது.தன்னை நவீன தீர்க்கதரிசியாகப் பாவித்து பலருக்கு உதவிசெய்யும் அமீரின் மற்றொரு பக்கமான நிழல் உலக வாழ்வையும் பேசுகிறது. The Teachers lounge ஜெர்மன் படம்.கார்லா நோவக் கட்டுப்பாடு மிக்க பெண் ஆசிரியர்.தன்னோடு பணியாற்றும் பெண் எழுத்தர் மீது கார்லா திருட்டுக் குற்றம் சுமத்துகிறாள்.எழுத்தரின் மகன் கார்லாவின் மாணவன்.தனது தாயின் நம்பகத்தன்மைக்கு கார்லா,ஊறு விளைவித்ததாக நினைக்கிறான். ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து தனியே போராடுகிறான்.கார்லாவின் சந்தேகத்தின் அடிப்படையிலான குற்றத்திற்கும்;மாணவனின் உணர்வுப்பூர்வமான நியாயத்திற்கும் இடையே மறைந்துள்ள உண்மையை, காலமே கண்டறியும் என்பதை நெகிழ்வாக கூறுகிறது இப்படம். இது போன்ற எண்ணற்ற சிறப்பான படங்கள். திரையிடல்களைத் தவிர, தாகூர் திரையரங்க வளாகத்தில் போரும் இனப்படுகொலையும்; இனவாதம்; போன்ற தலைப்புகளில் திறந்த வெளிக்கருத்தரங்கமும்,
* சினிமா விமர்சனம்-புதிய சவால்கள்;
* இந்திய சினிமா இயக்கத்தில் பிலிம் சொஷைடிகளின் பங்கு;
* சினிமா குறித்த அரசின் கொள்கைமுடிவின் தேவையும், முக்கியத்துவமும்;
* சினிமாவில் பெண்கள் பற்றிய பார்வை மற்றும்
உடல் அரசியல்; போன்ற தலைப்புகளில் கருத்த ரங்கங்களும்,கலாச்சார நிகழ்ச்சிகளும், இயக்கு நர்களோடு நேருக்கு நேர் விவாதங்களும்,அடூர் கோபால கிருஷ்ணன் திறந்து வைத்த மிருணாள் சென்னின் கண்காட்சியும் என, தினந்தோறும் இளைஞர் கூட்டம் அலைமோத ஊர்த் திருவிழாபோல் இவ்விழா நடைபெற்றது. 2023ல் வெளியான பல விருதுகள் பெற்ற, சிறந்தப் படங்களையே தேர்ந்தெடுத்து விருந்தளித்துள்ளனர். பரந்துபட்ட நல்லனுபவத்தை கொடையாக வழங்கி யுள்ளது இந்த எட்டு நாள் திருவிழா.