குஜராத் பைல்ஸ் என படமெடுத்தால் திரையிட அனுமதிப்பீரா என மோடிக்கு பிரபல பாலிவுட் நடிகர் வினோத்காப்ரி கேள்வி எழுப்பி உள்ளார்.
காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றம் தொடர்பாக தி காஷ்மீர் பைல்ஸ் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் வகையில் வெளியாகி இருக்கும் திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குஜராத் கலவரம் குறித்து குஜராத் பைல்ஸ் என்ற திரைப்படத்தை இயக்க இருப்பதாக பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வினோத் காப்ரி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை டேக் செய்து," குஜராத் கலவரம் தொடர்பான உண்மையை அடிப்படையாக கொண்டு கலையை அடிப்படையாக கொண்டு 'குஜராத் பைல்ஸ்' என்ற திரைப்படத்தை எடுக்க இருக்கிறேன். அதில் உங்களின் பங்கு குறித்து விரிவாக காட்டப்படும், படத்தை வெளியிட தடை விதிக்க மாட்டேன் என்று மக்களுக்கு முன்பாக வெளிப்படையாக உறுதியளிப்பீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.