குஜராத்தில் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் துவாரகா அருகே இன்று மதியம் 12.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது குஜராத்தின் துவாரகாவில் இருந்து 556 கிமீ மேற்கே 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மிதமான நிலநடுக்கத்தால் பெரிதளவில் சேதம் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.