states

img

மதமாற்றத் தடையைத் தொடர்ந்து ‘லவ் ஜிகாத்’திற்கு எதிராகவும் சட்டம்.... குஜராத் பாஜக அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா சொல்கிறார் ....

அகமதாபாத்:
பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இந்த மாநிலங்களின் வரிசையில், பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான குஜராத்திலும் ‘குஜராத் மதச் சுதந்திரமசோதா-2021’ தயார் செய்யப்பட்டு- கொரோனா கொடூரத் திற்கு இடையிலும், கடந்த ஏப்ரல்மாதமே பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத்தின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. மசோதாவைப் பரிசீலித்த ஆளுநர், கட்டாய மதமாற்றத் தடை மசோதாவுக்கு தற்போது ஒப்புதலும் அளித் துள்ளார். இதையடுத்து, குஜராத்தில் இனிமேல் ஒருவரை கட்டாயமாக மதம் மாற்றினாலோ அல்லது கட்டாயமாக மதம் மாற்றுவதற்கு துணை புரிந்தாலோ குற்றம் சாட்டப்பட்ட அந்த நபருக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.மதம் மாற்றப்பட்டவர், 18 வயதுக்கு உட்பட்டவராகவோ, தலித்அல்லது பழங்குடியினராக இருந்தாலோ, குற்றம் சாட்டப் பட்டவருக்கு 4 ஆண்டு முதல் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.ஒரு அமைப்பு இந்த குற்றத்தைப் புரிந்தால், அந்த அமை பபின் பொறுப்பாளருக்கு 3 ஆண்டுமுதல் 10 ஆண்டு வரைசிறைத்தண்டனை விதிக்கப் படும்.இந்ததகவலை ஞாயிறன்று ஊடகங்களிடம் தெரிவித்த குஜராத் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா, ‘மதமாற்றத் தடையைத் தொடர்ந்து, விரைவில் ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராகவும் பேரவையில் கடுமையான சட்டங்களைக் கொண்டுவர உள்ளோம்’ என்று மிரட்டியுள்ளார்.

;