states

img

கர்நாடகா கல்வி நிறுவனத்தில் ஆயுதப்பயிற்சி கொடுக்கும் பஜ்ரங் தள்

கர்நாடகா மாநிலம், பொன்னம்பேட் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின்போது இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் தங்கள் உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை வெளிப்படையாக வழங்கியுள்ளது.

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம், பொன்னம்பேட்டையில் உள்ள சாய் சங்கர் கல்வி நிறுவனத்தில் பஜ்ரங் தள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் திரிசூலத்தை உயர்த்திக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. பஜ்ரங் தள் உறுப்பினர்களில் ஒருவர் தனது முகநூலில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் அமைப்பின் தலைவர் ஒருவர் திரிசூலம், உறுப்பினர் ஒருவருக்கு ஆயுதம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

கடந்த அக்டோபரில், பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில், அமைப்பின் செயல்பாட்டாளர்களுக்கு கத்திகளை விநியோகித்த நிகழ்வின் புகைப்படங்களும் வைரலாகின. இந்துத்துவ அமைப்பின் தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர், இது வெறும் ‘திரிசூலம்’ விநியோகிக்கும் ஒரு அடையாள நிகழ்ச்சி என்றும் தெரிவித்துள்ளனர்.

 

;