states

img

வறுமையால் பெண் குழந்தையை விற்ற பெற்றோர்

ஒடிசாவில் வறுமை காரணமாக பிறந்த பெண் குழந்தையை பெற்றோர் விற்பனை செய்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசாவின் சம்பேபால் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்தாஸ் தம்பதி  தங்களது வறுமை காரணமாக பிறந்த பெண் குழந்தையை ரூ.7000 க்கு விற்பனை செய்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தசரத்பூர் பிளாக்கின் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. 
குழந்தையை விற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்குக் குழந்தையின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
“நாங்கள் மிகவும் ஏழைகள், ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனவே, பிறந்த குழந்தையை எங்கள் உறவினர் ஒருவருக்குக் கொடுக்க முடிவு செய்தோம்,” என்று குழந்தையின் தந்தை சுரேஷ் தாஸ் கூறியுள்ளார்.

;