“மேற்கு வங்கத் தில் அரசியல் ஆதாயத்திற் காக பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் மத உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கின்றன” என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மேற்கு வங்க மாநிலத்தில் மக்களின் அன் றாடப் பிரச்சனைகள் மூடி மறைக்கப்படுகின்றன. மக் கள் பிரச்சனை பற்றிப் பேசி னால் மாநிலத்தில் வன்முறை கள் அரங்கேறி வருகின்றன. அதாவது பாஜக மற்றும் திரி ணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தேர்தலில் மத உணர்வுகளைத் தூண்ட முயற்சிக்கின்றன. அதேசம யம் 500 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று ராம ருக்கு முதல்முறையாக வீடு கிடைத்துள்ளதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால் சாமானியனின் வீடு எங்கே?” என முகமது சலீம் கேள்வி எழுப்பியுள்ளார்.