கொல்கத்தா, செப்.10- கொல்கத்தாவில் ஆறு இடங்களில் அமலாக்கத்துறை யினர் சனிக்கிழமை சோதனை நடத்தினர். மொபைல் கேமிங் செயலியின் மூலம் பணமோசடி யில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச் சாட்டு அடிப்படையில் தொழிலதி பர் அஹமதுகான் என்பவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக் குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதி யாக கொல்கத்தாவில் ஆறு இடங்களில் அமலாக்கத்துறை யினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சுமார் 7 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க அமைச்சரும் கொல்கத்தா மாநகராட்சி மேயரு மான ஃபிர்ஹாத் ஹக்கீம், சோதனை குறித்து கூறுகையில், “குற்றவாளி களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் தொடர் சோதனைகள் மூலம் மேற்குவங் கத்தின் பொருளாதாரத்தை அழித்து வருகின்றன” என்றார். அமலாக்கத்துறை சோதனை யில் பணம் கைப்பற்றப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினர் சுஜன் சக்ர வர்த்தி, இந்த பறிமுதல் நடவடிக் கைகள், “மாநிலத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் கறுப் புப் பணம் ஆதிக்கம் செலுத்து கிறது என்பதை நிரூபிப்பதாக உள் ளது ” என்றார்.