இமயமலைச் சாரலில் உள்ள உத்தர கண்ட் மாநிலத்தின் அல்மோரா வில் பேருந்து ஒன்று பள்ளத் தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் மொத்தம் 35 பயணிகள் இருந்தனர். அவர்களில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் அல்மோரா மாவட்ட மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,”சிகிச்சை பெற்று வரு பவர்களில் பெரும்பாலானோரின் உடல் நிலை கவலைக்கிடமாக நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிக ரிக்க வாய்ப்புள்ளது” என அல்மோரா காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர பிஞ்சா தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்ச மும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் இழப்பீடு தொகையை அறிவித் துள்ளது உத்தரகண்ட் அரசு.