லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலம், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கொரோனா பிரதேசமாக மாறிவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அகிலேஷ் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
‘’பாஜக அரசின் தவறான நிர்வாகம் மற்றும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த குறுகிய பார்வை காரணமாக உத்தரப்பிரதேசம் ‘கொரோனா பிரதேச’ மாநிலமாக மாறியுள்ளது.மாநிலத்தில் உடல்களை எரியூட்டும் இடங்களில் கூட்டம் அலைமோதும் நிலையில், கொரோனா தொற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக தவறான புள்ளி விவரங்களை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. அரசின் இந்த தோல்வி குறித்து, பாஜக எம்பி, எம்எல்ஏ-க்களே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.பாஜக சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவர்கள் எண்ணிக்கை, மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள் தொடர் பான புள்ளி விவரங்களும் போலியாக உள்ளன. ஆட்சியில் இருப்பது குறித்து பாஜக இனியும் பெருமைப்படக் கூடாது. இவ்வாறு அகிலேஷ் கூறியுள்ளார்.