states

img

உ.பி.யில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை சுட்டுக்கொன்ற தந்தை  

உத்தரபிரதேசத்தில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை நீதிமன்றத்தில் வைத்து சிறுமியின் தந்தை சுட்டு கொன்றுள்ளார்.  

உத்தரபிரதேசம் கோரக்பூரில் பீகாரைச் சேர்ந்த தில்ஷாத் உசேன் என்பவர் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். தனது கடைக்கு எதிரே இருக்கும் வீட்டில் வசித்து வந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தில்ஷாத் உசேன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை கோரக்பூர் சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு  போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த தில்ஷாத் உசேனை நீதிமன்ற நுழைவு வாயிலில் வைத்து சிறுமியின் தந்தை சுட்டுக் கொன்றார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறுமியின் தந்தை ஓய்வுபெற்ற எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைதொடர்ந்து சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.