states

img

லக்கிம்பூர் வன்முறை: காவல்துறை விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உத்தரபிரதேச காவல்துறையினரின் விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் கடந்த மாதம் விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் கார் ஏற்றிய வன்முறையில் 8 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தில் பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது வன்முறை குறித்த கேள்விகளுக்கு ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்த விசாரணைக்கு ஏற்றது. இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறை குறித்த விசாரணையை உத்தரபிரதேச காவல்துறை மிக மெத்தனமாக நடந்து கொள்கிறது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தடயவியல் விசாரணை அறிக்கை கூட வெளிவரவில்லை. உத்தரபிரதேச அரசு இதுவரை அளித்த விசாரணை நிலை குறித்த அறிக்கையில் எதுவுமே இல்லை. குறைந்தபட்சம் குற்றம்சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை கூட காவல்துறை இதுவரை பறிமுதல் செய்ய வில்லை உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் காவல்துறை விசாரணையை ஏன் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு கண்காணிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.