states

img

3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மாரடைப்பால் உயிரிழப்பா? பாஜக ஆளும் உ.பி., பள்ளியின் அறிக்கையால் வலுக்கும் சந்தேகம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதே சத்தில் பெண்கள், சிறுமிக ளுக்கு எதிரான குற்றச் சம்ப வங்கள் மிக மோ சமான அளவில் அதிக ரித்து வருகின்றன. பாலியல் வன்கொ லை, பள்ளி - கல்லூரி மாணவிகள் மர்ம மர ணம் என நாள்தோறும் உத்தரப்பிரதேசத்தில் ஏதாவது ஒரு குற்றச் சம்பவம் அரங்கேறி வருகின்றது. பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங் கள் இல்லாத நாளே உத்தரப் பிரதே சத்தில் இல்லாத சூழலில், அம்மாநில தலைநகர் லக்னோவில் உள்ளது மான்ட் போர்ட் பள்ளியில் 3ஆம் வகுப்பு சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். 

இதுதொடர்பாக மான்ட்போர்ட் பள்ளி யின் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”வியாழனன்று 3ஆம் வகுப்பு  படிக்கும் சிறுமி மான்வி சிங் விளையாட்டு  மைதானத்தில் மயங்கி விழுந்ததாக தகவல் கிடைத்ததும், அவர் அருகிலுள்ள பாத்திமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக சிறுமி இறந்து விட்டதாகக் கூறினர்” என கூறப் பட்டுள்ளது. 

அறிக்கையில் சந்தேகம்

3ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மான்வி சிங்கிற்கு வெறும் 9 வயது தான் ஆகிறது. சிறுமிக்கு உள்நோய்கள் எதுவும் கிடையாது. தற்போதைய சூழ லில் உத்தரப்பிரதேசத்தில் வெயிலும் அவ்வளவாக இல்லை என்ற நிலையில், மான்வி சிங் விளையாடிக் கொண்டி ருக்கும் பொழுது எப்படி அவருக்கு மார டைப்பு ஏற்பட்டு இருக்கும் என பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையும் இது வரை வெளியாகவில்லை. இதனால் சிறுமி மரணம் இயற்கையானது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.