states

img

உத்தரபிரதேசத்தில் 48 கிலோ கஞ்சா பறிமுதல்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூரில் 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் 48 கிலோ கஞ்சா பறிமுதல் செய்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சத்பீர் மற்றும் ஷகில் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து  அவர்கள் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் துக்ரிதி மாதவ் கூறுகையில், வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது காவல்துறையினர் காரை மறித்ததையடுத்து போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆந்திரத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது.