கோவை:
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றன.இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சமீப காலமாக பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கல்லூரி அதிகமாக இருக்கும் இடங்களில் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை ஜோராக நடக்கிறது. பெரும்பாலான மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதிகளில் தங்கி படிப்பதால் கண்காணிக்க யாரும் இல்லாததால் இது போன்று தடம் மாறி செல்கின்றனர்.
இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.