உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, 2.89 கோடி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மாநிலத்தில் மொத்தம் 15.44 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவுப் வாக்காளர் பட்டியலில் 12.56 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
இந்த வரைவுப் பட்டியல் தொடர்பாக, வரும் பிப்ரவரி 6ஆம் தேதி வரை வாக்காளர்களின் உரிமைக் கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் ஏற்கப்படும் என உத்தரப் பிரதேச தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், வரைவுப் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் படிவம்–6 (Form 6)-ஐ சமர்ப்பித்து பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் பெயர் நீக்கம், இடமாற்றம், இரட்டைப் பதிவுகள் மற்றும் தகுதியற்ற பதிவுகள் போன்ற காரணங்களால் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
