சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் - ரஷ்மிகா நடிப்பில் உருவான “புஷ்பா 2” திரைப் படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆன நாளின் அதிகாலை தெலுங்கானா மாநி லம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரை யரங்கிற்கு அல்லு அர்ஜுன் திடீரென வந்தார். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரி சலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவு அடைந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
காவல்துறையின் எச்சரிக்கையை மீறி திரையரங்கிற்கு வந்ததன் கார ணமாகவே நெரிசல் ஏற்பட்டது என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் சட்டமன்றத்தில் அல்லு அர்ஜுனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். இதற்கு அல்லு அர்ஜுனா பதிலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். இத்தகைய சூழலில் ஞாயிற்றுக்கிழமை மாலை உஸ்மானியா இஸ்லாமியப் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் அல்லு அர்ஜுன் வீடு முன் போராட்டம் நடத்தி தாக்குதல் நடத்தினர். இந்த சம்ப வத்திற்கு முதல்வர் ரேவந்த் கண்டனம் தெரிவித்து,”சட்டம் ஒழுங்கை கவன மாக கையாள வேண்டும்” என டிஜிபிக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் விவகா ரம் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முனைப்பில் பாஜக தீவிரமாக இறங்கி யுள்ளது. அதாவது அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தும், முதல்வர் ரேவந்துக்கு எதிராக அம் மாநில பாஜக அறிக்கை வெளி யிட்டுள்ளது.
இதையடுத்து பாஜகவிற்கு ரேவந்த் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”நான் என் தந்தை, தாத்தா பெயரை வைத்து முதல்வராக வர வில்லை. பழங்குடியின பின்புலத்தில் இருந்து வந்தவன். நாளை எனது முதல்வர் பதவி இருக்கும். இல்லாமல் கூட போகலாம். ஆனால் சுயமரியாதை, மக்கள் நலன் எனக்கு முக்கியம். அதற்கா கவே மட்டுமே நான் பணியாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.