சத்தீஸ்கர் மாநிலத்தில் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரு கிறது. இந்த மாநிலத்தின் கபு என்ற பகுதியில் ஏமான் - பிரதிமா என்ற ஜோடிக்கு கடந்த டிச.18ஆம் தேதி திரு மணம் நடைபெற்றது.
பாரம்பரியச் சடங்குகள், தாலி, குங்கு மம், மேள தாளம் உள்ளிட்டவை எதுவும் இல்லாமல், மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில், மண மக்கள் அரசியலமைப்பு புத்தகம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் புகைப்படத்தை சாட்சியாக வைத்து உறுதிமொழி எடுத் துக்கொண்டு திருமணம் செய்துகொண் டனர். ஏமான் - பிரதிமா ஜோடியின் அரசி யலமைப்பு சாசன முன்னிலை திரும ணத்திற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அம்பேத்கர் அவமதிப்பு நிகழ்விற்கு இதுதான் பதிலடி என்ற கருத்துக்களுடன் சமூகவலைத்தளங்களில் ஏமான் - பிரதிமா ஜோடியின் திருமண நிகழ்வு வைரலாகி வருகிறது.