அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி குறித்த குழு விவா தத்தில் கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் பாராட்டப்பட்டார். தாய் - சேய் பாதுகாப்புத் துறையில் கேரளா மேற் கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன. தாய் - சேய் ஆரோக்கியத்திற்கா கவும், குழந்தையின் வளர்ச்சிக்காகவும் சுகாதாரத்துறை, மகளிர் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் நடத் தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் பேசினார். வயிற்றில் இருந்து பிறந்தது முதல் 2 ஆண்டுகளில் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்கான சிறப்பு திட்டங் கள், மூன்று வயது வரை கூடுதல் ஊட்டத் சத்து, மூன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை அங்கன்வாடிகளில் வழங்கப்படும் முட்டை மற்றும் பால் உள்ளிட்ட ஊட்டச் சத்து ஆதரவு, குழந்தை பிறந்தவுடன் நடத்தப்படும் பரிசோதனை, ஆஷா மற்றும் ஆர்பிஎஸ்கே செவிலியர்கள் சீரான இடைவெளியில் மேற்கொள்ளும் சோதனைகள், டிஜிட்டல் ஆவணங்கள் போன்ற அனைத்தையும் அமைச்சர் விளக்கினார். குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை ஆய்வு செய்வதற்கான அவசர தலையீடுக்கு உலக நாடுகளுக்கு அழைப்பு (Growing stronger: An urgent call for improving child nutrition) விடுத்து நடந்த இந்த விவாத நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது ஔரங்கசீப், சர்வதேச கூட்டாண்மைக்கான ஐரோப்பிய ஆணையர் ஜுட்டா உர்பிலினியன், ஈக்வடார் துணை அமைச்சர் ஜுவான் கார்லோஸ் பலாசியோஸ், யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரசல், உலக வங்கியின் தென் பிராந்திய துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய துணைத் தலைவர் மஹுவேலா பெரோ மற்றும் பலர் பங்கேற்றனர்.